ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

Added : அக் 09, 2021
Share
ஊத்துக்கோட்டை--ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பணிகள் துவக்கப்பட்டன.போக்குவரத்து வசதிக்காக, பாலத்தின் இடது புறம் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.இரு தினங்களாக ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள

ஊத்துக்கோட்டை--ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பணிகள் துவக்கப்பட்டன.போக்குவரத்து வசதிக்காக, பாலத்தின் இடது புறம் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.இரு தினங்களாக ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ததால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் பாலத்தின் அருகே போடப்பட்ட சாலையில் உடைப்பு ஏற்பட்டதால், அவ்வழியே செல்வோர் பாதிக்கப்பட்டனர்.தகவலறிந்த மேம்பால ஊழியர்கள் உடைப்பை தற்காலிகமாக சீரமைத்தனர். சிறிய வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு, லாரி, பஸ் போன்றவை செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது.இப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு அதிகமானால், சாலை பெரியளவில் உடைவது உறுதி.பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி முடித்தால் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X