கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.53 லட்சம் ஈமு மோசடி 5 பேருக்கு 10 ஆண்டு சிறை

Added : அக் 09, 2021
Share
Advertisement
கோவை:ஈமு நிதி நிறுவனம் நடத்தி, 53 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஐந்து பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர், கணபதிபாளையத்தில், 'ஏ.கே.ஏ. ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் பங்குதாரர்களாக திருப்பூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 53; கந்தசாமி, 51; அசோக்குமார், 33; பெருமாள் ராஜ், 54; சரவணன், 47 ஆகியோர் இருந்தனர். ஈமு கோழி வளர்க்க டிபாசிட்

கோவை:ஈமு நிதி நிறுவனம் நடத்தி, 53 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஐந்து பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர், கணபதிபாளையத்தில், 'ஏ.கே.ஏ. ஈமு பார்ம்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் பங்குதாரர்களாக திருப்பூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 53; கந்தசாமி, 51; அசோக்குமார், 33; பெருமாள் ராஜ், 54; சரவணன், 47 ஆகியோர் இருந்தனர். ஈமு கோழி வளர்க்க டிபாசிட் செய்வோருக்கு, அதிக வட்டி தருவதாக விளம்பரப்படுத்தினர். டிபாசிட் செய்த 22 பேரிடம், பணத்தை திருப்பி தராமல் 53 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஐந்து பேரையும் 2012ல் கைது செய்து, 'டான்பிட்' கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை, மொத்தம் 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். முத்துகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X