பொது செய்தி

தமிழ்நாடு

மீஞ்சூர், அத்திப்பட்டில் அதிகாரிகள் ஆய்வு

Added : அக் 09, 2021
Share
Advertisement
மீஞ்சூர்-வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைப்பது, மழை நீர் செல்லும் கால்வாய்களை துார் வாருவது உள்ளிட்ட பல்வேறு

மீஞ்சூர்-வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைப்பது, மழை நீர் செல்லும் கால்வாய்களை துார் வாருவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அத்திப்பட்டு புதுநகர், வல்லுார் பகுதிகளில் மழை நீர் செல்லும் கால்வாய்களையும், மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயார்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டனர்.பொன்னேரி வருவாய் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X