போலீஸ் டைரி

Added : அக் 09, 2021
Share
Advertisement
குண்டாசில் வாலிபர் கைதுதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர், ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்கமல், 28. இவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டபோது, தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர் மீது, ஏற்கனவே வழிப்பறி சம்பந்தமாக ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதையடுத்து ராஜ்கமலை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டுமென, எஸ்பி வருண்குமார்,

குண்டாசில் வாலிபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர், ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்கமல், 28. இவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டபோது, தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர் மீது, ஏற்கனவே வழிப்பறி சம்பந்தமாக ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து ராஜ்கமலை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டுமென, எஸ்பி வருண்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

பரிந்துரையை ஏற்ற, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் ராஜ்கமல் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

காவலர் மாயம் என புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் சேலை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் மகன் தமிழ்செல்வன், 34; பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 4ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மஞ்சுளா புகாரின்பேரில், திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த புட்லுார் கோமதி அம்மன் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன், 52. கட்டட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம், முருகஞ்சேரி கிராமம் கண்ணதாசன் நகரில் ஏழுமலை வீட்டில், கட்டட வேலையில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இவரது மனைவி அஞ்சலை புகாரின்பேரில், மணவாள நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

8 பைக் பறிமுதல்

மணவாள நகர்: கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சி பாக்குப்பேட்டை பகுதியில், நேற்று முன்தினம், மணவாள நகர் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் கேட்பாரற்று கிடந்த எட்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, மணவாள நகர் போலீசார் காவல் நிலையம் எடுத்து வந்தனர். வாகன எண், இன்ஜின் எண் வைத்து விசாரித்து வருகின்றனர்.

தவறி விழுந்தவர் இறப்பு

கும்மிடிப்பூண்டி: வட மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்தவர் வித்யால் ஜனா, 35. கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான்குப்பம் கிராமத்தில், வாடகை வீட்டில் வசித்து, 'சிப்காட்'டில் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

7 சவரன் நகை கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, தேர்வழி கிராமத்தில் வசிப்பவர் துரைசாமி, 85; விவசாயி. நேற்று முன்தினம், குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கினார். நள்ளிரவில், பின் கதவு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். தனி அறையில், பானைக்குள் வைத்திருந்த ஏழு சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X