கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மேல்முறையீடு செய்யாத 552 சிறை கைதிகள்

Added : அக் 09, 2021
Share
Advertisement
மதுரை:'தண்டனையை எதிர்த்து 552 கைதிகள் மேல்முறையீடு செய்யவில்லை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.ஆயுள் கைதி ஒருவரது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், 'அனைத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அதிகாரிகளும் மத்திய சிறைகள், திறந்தவெளி சிறைகளில் ஆய்வு செய்ய வேண்டும். 'தண்டனைக்கு எதிராக உயர்

மதுரை:'தண்டனையை எதிர்த்து 552 கைதிகள் மேல்முறையீடு செய்யவில்லை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.

ஆயுள் கைதி ஒருவரது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள், 'அனைத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அதிகாரிகளும் மத்திய சிறைகள், திறந்தவெளி சிறைகளில் ஆய்வு செய்ய வேண்டும். 'தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத கைதிகளின் விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு நேற்று விசாரித்தது. மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு, 'தமிழக சிறைகளில் 3,538 தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 552 பேர், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை' என அறிக்கை தாக்கல் செய்தது. நீதிபதிகள், '552 பேரில் எத்தனை பேர் மேல்முறையீடு செய்ய விரும்புகின்றனர் என, சட்டப் பணிகள் ஆணைக்குழு அக்., 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X