பொது செய்தி

தமிழ்நாடு

48 ஆயிரம் பேருக்கு நாளை தடுப்பூசி இலக்கு!

Added : அக் 09, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில், 600 மையங்களில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில், 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள், வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் நாளை நடக்கும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில், 600 மையங்களில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில், 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள், வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் நாளை நடக்கும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.வீட்டில் ஊசிஇது குறித்து, நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள், முதல் தவணையாக 6.32 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இரண்டாம் தவணையாக 1.77 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.மாவட்ட அளவில் 600 இடங்களில் 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த, நாளை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், மூன்று நாட்களுக்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு, அவர்களின் வீடுகளில் சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.குழப்பம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோர், 7.26 லட்சம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 18 வயதுக்கு மேற்பட்டோர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 லட்சம் பேர் உள்ளனர்.ஆனால், 7.26 லட்சம் பேருக்கு இலக்கு வைத்து சுகாதாரத்துறை செயல்படுவதால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் கூறுகையில், 'கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை கொடுக்கப்படுகிறது. 7.26 லட்சம் பேருக்கு மட்டுமல்லாமல், கூடுதலாக உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்' என தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X