சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் அனுமதியின்றி கட்டிய 6 மாடி மருத்துவமனைக்கு 'சீல்'

Added : அக் 09, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலியில், வணிக நிறுவனம் கட்டுவதற்காக அனுமதி பெற்று, முறைகேடாக ஆறு மாடி கட்டடம் கட்டி செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டின் ராயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், 'திருநெல்வேலி, பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லுாரி சாலையில், டாக்டர் வினோத்குமார் பிலிப் என்பவர்
 நெல்லையில் அனுமதியின்றி கட்டிய 6 மாடி மருத்துவமனைக்கு 'சீல்'

திருநெல்வேலி:திருநெல்வேலியில், வணிக நிறுவனம் கட்டுவதற்காக அனுமதி பெற்று, முறைகேடாக ஆறு மாடி கட்டடம் கட்டி செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டின் ராயன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், 'திருநெல்வேலி, பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லுாரி சாலையில், டாக்டர் வினோத்குமார் பிலிப் என்பவர் வணிக வளாகம் கட்டுவதற்கு தரை தளத்துடன் மூன்று மாடிகள் கட்ட, மாநகராட்சியில் அனுமதி பெற்றுள்ளார். 'ஆனால், ஆறு மாடியில் வி.கே.பி.எஸ். என்ற மருத்துவமனையை கட்டியுள்ளார். அதை இடிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

ஜூன் 30ல் விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், மருத்துவமனை கட்டடத்திற்கு சீல் வைக்கும்படி உத்தரவிட்டனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெர்டின் ராயன், மீண்டும் ஐகோர்ட்டை அணுகினார். செப்., 28ல் விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு மாற்று ஏற்பாடு செய்வதோடு, கட்டடத்திற்கு சீல் வைக்கும்படி உத்தரவிட்டார்.

அக்., 4ல் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன், 48 மணி நேரத்தில் மருத்துவமனையை காலி செய்யுமாறு 'நோட்டீஸ்' அனுப்பினார். நேற்று காலை 10:00 மணிக்கு, மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருடன் மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், ஐந்து நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி, சீல் வைக்க விடாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் இழுத்தடித்தனர்.

மேலும், அந்த நோயாளிகள் தரப்பில், தங்களை வெளியேற்றக் கூடாது எனவும், மருத்துவமனையை சீல் வைக்கக் கூடாது எனவும், உயர் நீதிமன்ற கிளையில் அவசர மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர், நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, கட்டடத்தை சீல் வைக்க கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.இதையடுத்து, நோயாளிகள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். மதியம் 1:30க்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X