தமிழ்நாடு

வினாடிக்கு 8,000 கன அடி நீர் காஞ்சி பாலாற்றில் வர வாய்ப்பு: 30 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்--பாலாற்றில் வினாடிக்கு 8,000 கனஅடி நீர் வர வாய்ப்புள்ளதால், பாலாற்றின் இரு கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் வட மாவட்டங்களில், சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்று அணைக்கட்டிலிருந்து ஏற்கனவே, 2,000 கனஅடி நீர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.அவற்றை
 வினாடிக்கு 8,000 கன அடி நீர் காஞ்சி பாலாற்றில் வர வாய்ப்பு: 30 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

காஞ்சிபுரம்--பாலாற்றில் வினாடிக்கு 8,000 கனஅடி நீர் வர வாய்ப்புள்ளதால், பாலாற்றின் இரு கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் வட மாவட்டங்களில், சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்று அணைக்கட்டிலிருந்து ஏற்கனவே, 2,000 கனஅடி நீர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.அவற்றை துாசி மாமண்டூர் கால்வாய்க்கும், கோவிந்தவாடி கால்வாய்க்கும் திருப்பி விடப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆந்திராவில் இருந்து வரும் தண்ணீர், பொன்னையாற்றில் கலந்து பாலாற்றில் வருகிறது. காவேரிப்பாக்கம் அணைக்கட்டு ஏற்னவே நிரம்பிஉள்ளதால், பாலாற்றில் கூடுதல் தண்ணீர் வர வாய்ப்புள்ளது.

வினாடிக்கு, 8,000 கன அடிநீர் வரக்கூடும் என்பதால், காஞ்சிபுரம், வாலாஜாபாத் தாலுகா மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கிராமங்கள்பாலாற்றின் இடது கரையில் உள்ள பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், ஆளவந்தார்மேடு, விப்பேடு, வெங்கடாபுரம், செவிலிமேடு, ஓரிக்கை, சின்னகயம்பாக்கம், கோயம்பாக்கம், வில்லிவலம், வெங்குடி, வாலாஜாபாத், பழைய சீவரம் ஆகிய பகுதிகள்.வலது கரையில் உள்ள கோழிவாக்கம், புஞ்சையரசந்தாங்கல், வளத்தோட்டம், குருவிமலை, விச்சாந்தாங்கல், ஆசூர், அவலுார், அங்கம்பாக்கம், திருமுக்கூடல், பினாயூர், திருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி, கலியப்பேட்டை, ஒரக்காட்டுபேட்டை மற்றும் காவித்தண்டலம் ஆகிய கிராமங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X