பூ பறிப்பது யார்? தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பூ' பறிப்பது யார்? தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

Added : அக் 09, 2021
Share
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தில் மூன்றாவது வார்டு கவுன்சிலர் தி.மு.க.,வைச் சேர்ந்த குமார் இறந்ததால், இந்த இடத்துக்கு இன்று, இடைத்தேர்தல் நடக்கிறது.மொத்தமுள்ள 18 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க., எட்டு; அ.தி.மு.க., ஆறு; பா.ஜ., - தே.மு.தி.க., சுயேச்சை தலா ஓரிடத்தில் உள்ளன. தற்போது ஒன்றியக் குழு தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வெங்கட்ரமணா இருக்கிறார்.கடந்த 2016 உள்ளாட்சி

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தில் மூன்றாவது வார்டு கவுன்சிலர் தி.மு.க.,வைச் சேர்ந்த குமார் இறந்ததால், இந்த இடத்துக்கு இன்று, இடைத்தேர்தல் நடக்கிறது.மொத்தமுள்ள 18 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க., எட்டு; அ.தி.மு.க., ஆறு; பா.ஜ., - தே.மு.தி.க., சுயேச்சை தலா ஓரிடத்தில் உள்ளன. தற்போது ஒன்றியக் குழு தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வெங்கட்ரமணா இருக்கிறார்.கடந்த 2016 உள்ளாட்சி தேர்தலில் பூண்டி ஒன்றியத்தில் பெரும்பான்மையாக தி.மு.க., ஜெயித்தும் ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க முடியவில்லை.காரணம், கட்சியின் உள்ளடி, 'கட்டிங்' காரணமாக, தி.மு.க.,வைச் சேர்ந்த மூவர், வெங்கட்ரமணாவுக்கு ஓட்டளித்தனர்.தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் நபர் வென்றால், தி.மு.க.,வின் பலம் ஒன்பது ஆகும். அ.தி.மு.க., கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் நபர் வென்றால் ஏழு ஆகும். எனினும் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இல்லாததால், ஓரிடம் துண்டு விழுந்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆட்கள் பலம் காரணமாக தி.மு.க.,வில் ஒருவர் ஒன்றிய குழு தலைவராக வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்றிய துணை தலைவர் பதவி ஏற்கனவே தி.மு.க., நபரான மகாலட்சுமி தான் இருக்கிறார்.எனவே இந்த தேர்தலில் 'பூ'ண்டி ஒன்றியத்தை கைப்பற்ற போவது யார் என, இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வாக்காளர்களை பல வகைகளிலும் கவனித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X