கோர்ட் செய்தி

தமிழ்நாடு

துாக்கு தண்டனை வாலிபர் உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : அக் 09, 2021
Share
Advertisement
மதுரை,:தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகனுக்கு, புதுக்கோட்டை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இவ்வழக்கு ஆவணங்கள் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி திலகராணி, 45; இவர்களுக்கு நான்கு மகன்கள். குடும்பத் தகராறில்

மதுரை,:தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகனுக்கு, புதுக்கோட்டை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இவ்வழக்கு ஆவணங்கள் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி திலகராணி, 45; இவர்களுக்கு நான்கு மகன்கள். குடும்பத் தகராறில் 2007ல் தங்கராஜ் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக, கறம்பக்குடி போலீசார் திலகராணியைக் கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால், திலகராணி விடுதலை செய்யப்பட்டார்.

திலகராணி, மூத்த மகன் ஆனந்த், 25, இடையே சொத்து பிரச்னை இருந்தது. 2018 மார்ச் 18ல் ஆனந்த் அரிவாளால் திலகராணி தலையைத் துண்டித்து கொலை செய்ததாக, மழையூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.ஆனந்திற்கு துாக்கு தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா, அக்., 1ல் தீர்ப்பளித்தார்.

ஆனந்த், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கீழமை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிக்கும் பட்சத்தில், அதை பரிசீலித்து முடிவெடுக்க, ஆவணங்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவது வழக்கம்.இதன்படி, பரிந்துரைக்கப்பட்ட இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு, ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நான்கு வாரங்கள் ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X