சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழை நீர் கால்வாய் துார்ப்பு தண்டலம் மக்கள் மறியல்

Added : அக் 09, 2021
Share
Advertisement
திருப்போரூர்-மழை நீர் கால்வாய் துார்க்கப்பட்டதை கண்டித்து, தண்டலம் கிராமத்தினர் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. 500 ஏக்கர் பரப்பு ஏரி நீரை வைத்து, 1,000 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இந்த ஏரிக்கு, வனப்பகுதியில் இருந்து வரும் மழை நீர், திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு சாலைகள் இணையும்

திருப்போரூர்-மழை நீர் கால்வாய் துார்க்கப்பட்டதை கண்டித்து, தண்டலம் கிராமத்தினர் நேற்று, சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. 500 ஏக்கர் பரப்பு ஏரி நீரை வைத்து, 1,000 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இந்த ஏரிக்கு, வனப்பகுதியில் இருந்து வரும் மழை நீர், திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு சாலைகள் இணையும் தரைப்பாலம் வழியாக கடந்து, பட்டா நிலம் குறுக்கே இடது புறம் திரும்பி செல்கிறது.பல ஆண்டுகளாக இவ்வாறு நீர் செல்லும் தடத்தில், தரைப்பாலம் அருகே உள்ள பட்டா நில உரிமையாளர், நிலத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டி, கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்து வருகிறார்.பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட மண், மழை நீர் கால்வாயில் கொட்டப்பட்டு துார்க்கப்பட்டு உள்ளது.இதையறிந்த தண்டலம் ஊராட்சி மக்கள், நேற்று அங்கு சென்று, தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை நிறுத்தி, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் வருவதற்கு தாமதமானதால், திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீசார், மக்களிடம் சமரசம் பேசினர். திருப்போரூர் தாசில்தார் ராஜன், வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி வந்தனர்.அவர்களிடம், 'தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை நிறுத்தி, கால்வாயில் துார்க்கப்பட்ட மண்ணை அகற்ற வேண்டும்.'மழை நீர் ஏரிக்கு செல்ல முறையான கால்வாய் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.இதையடுத்து தாசில்தார், தடுப்புச் சுவர் அமைப்பதை தற்காலிகமாக நிறுத்தி, நில உரிமையாளர், பொதுமக்களை அழைத்து சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X