பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோர் காப்பகத்தில் குழும அதிகாரிகள் ஆய்வு

Added : அக் 09, 2021
Share
Advertisement
மதுராந்தகம்-கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல குழுமம், பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதில் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை, ஆய்வு செய்து வருகின்றனர்.மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கத்தில் தனியார்

மதுராந்தகம்-கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல குழுமம், பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதில் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை, ஆய்வு செய்து வருகின்றனர்.மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கத்தில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில், மாவட்ட குழந்தைகள் நல குழுமத் தலைவர் ராமசந்திரன் தலைமையில், மாவட்ட பணிக்குழு உறுப்பினரும், குழந்தைகள் நல குழு உறுப்பினருமான சக்திவேல் உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர்.சிறுவர் - சிறுமியருக்கு கொரோனா விழிப்புணர்வும், மன அழுத்தம் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமாக வாழ ஆலோசனை வழங்கப்பட்டது.காப்பகத்தில் உள்ள சிறுவர்களுக்கு வெந்நீர் வழங்கவும், உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X