ஓட்டளிக்க அனுமதி மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டளிக்க அனுமதி மறுப்பு

Added : அக் 09, 2021
Share
காஞ்சிபுரம்-ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு தபால் ஓட்டளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சிறுகாவேரிபாக்கம் சாலையில் அவர்கள், போராட்டம் நடத்தினர்.இதனால் காஞ்சிபுரம் - வேலுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அவர்களை அழைத்து பேசினர். பின் தாசில்தார் காமாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு

காஞ்சிபுரம்-ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு தபால் ஓட்டளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சிறுகாவேரிபாக்கம் சாலையில் அவர்கள், போராட்டம் நடத்தினர்.இதனால் காஞ்சிபுரம் - வேலுார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அவர்களை அழைத்து பேசினர். பின் தாசில்தார் காமாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களிடம் பேச்சு நடத்தினர்.அதிகாரிகள், 'கலெக்டரிடம் விசயத்தை தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'தேர்தல் பணியில் ஈடுபட்டோருக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் கொடுத்திருக்க வேண்டும். அதை தேர்தல் அலுவலர்கள் கொடுக்காததால் பிரச்னை வந்துள்ளது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X