சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பறிமுதல்

Added : அக் 09, 2021
Share
Advertisement
மதுராந்தகம்-பாதிரி கிராமத்தில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பாதிரி ஊராட்சியில் மேல்மருவத்துார் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்குள்ள முதலியார் தெருவில் சிலர் ஒன்றாக கூடி, வாக்காளர்களுக்கு, பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டதும்,

மதுராந்தகம்-பாதிரி கிராமத்தில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பாதிரி ஊராட்சியில் மேல்மருவத்துார் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்குள்ள முதலியார் தெருவில் சிலர் ஒன்றாக கூடி, வாக்காளர்களுக்கு, பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டதும், கையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு, அந்த நபர்கள் தப்பி ஓடினர்.போலீசார் பணத்தை எண்ணி பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டுகள் 150 என, 75 ஆயிரம் ரூபாய் இருந்தது.அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மூலம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X