பொது செய்தி

தமிழ்நாடு

'பிகானேர்வாலா புட்ஸ்' சென்னையில் ஷோரூம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை-இனிப்பு மற்றும் சிற்றுண்டி விற்பனையில் முன்னணியில் உள்ள, 'பிகானேர்வலா புட்ஸ்' நிறுவனம், சென்னை, நுங்கம்பாக்கம், கல்லுாரி சாலையில், புதிய கடையை துவக்குகிறது.நாட்டில், இனிப்பு வகைகள், திண்பண்டங்கள் விற்பனையில், 'பிகானேர்வலா புட்ஸ்' முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 115க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், அமெரிக்கா, நேபாளம், ஐக்கிய அரபு நாடுகள்,

சென்னை-இனிப்பு மற்றும் சிற்றுண்டி விற்பனையில் முன்னணியில் உள்ள, 'பிகானேர்வலா புட்ஸ்' நிறுவனம், சென்னை, நுங்கம்பாக்கம், கல்லுாரி சாலையில், புதிய கடையை துவக்குகிறது.நாட்டில், இனிப்பு வகைகள், திண்பண்டங்கள் விற்பனையில், 'பிகானேர்வலா புட்ஸ்' முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 115க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், அமெரிக்கா, நேபாளம், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், நியூசிலாந்து நாடுகளிலும் கடைகள் உள்ளன.தற்போது, பிகானேர்வலா நிறுவனம், சென்னை, நுங்கம்பாக்கம், கல்லுாரி சாலையில் புதிய கடையை துவக்குகிறது. இந்த கடை நவீன வசதிகளுடன், தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. அங்கு, பல்வேறு வகையான இனிப்பு வகைகள், 'சாட், நம்கீன்' உட்பட வட மாநிலங்கள், தென் மாநிலங்களின் உணவு வகைகள்; சீன உணவு வகைகள் என, 200க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்கப்படும்.புதிய கடை இளம் தலைமுறையினருக்கும், குடும்பங்களுக்கும் இந்திய சுவையான உணவு வகைகளின் தேவையை பூர்த்தி செய்யும்.இதுகுறித்து, பிகானேர்வாலா நிறுவன இயக்குனர் அசோக் அகர்வால் கூறுகையில், ''எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய இனிப்பு வகைகளை தரமான முறையில் வழங்குகிறது. ''சமூகத்தின் அனைத்து பிரிவு மற்றும் வயதுடைய வாடிக்கையாளர்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X