ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு

Added : அக் 09, 2021
Share
சென்னை-தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக, வேல்ஸ் பல்கலை நிறுவனர் ஐசரி கணேஷ், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். அதன்படி, சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது.இதில், வேல்ஸ் பல்கலை நிறுவனரும், இந்திய

சென்னை-தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக, வேல்ஸ் பல்கலை நிறுவனர் ஐசரி கணேஷ், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். அதன்படி, சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது.இதில், வேல்ஸ் பல்கலை நிறுவனரும், இந்திய தேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவருமான ஐசரி கணேஷ், போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரைத் தொடர்ந்து செயல் தலைவராக ராமச்சந்திரன், பொதுச் செயலராக ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X