அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் டுவிட்

Added : அக் 09, 2021
Share
Advertisement
''நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு'' என கருணாநிதியால் புகழப்பட்டவர் திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.- ஸ்டாலின், தமிழக முதல்வர்கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு

''நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு'' என கருணாநிதியால் புகழப்பட்டவர் திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

- ஸ்டாலின், தமிழக முதல்வர்

கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி மூழ்கித் தத்தளித்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தருகிறது. மூழ்கிய விசைப் படகினையும் மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சீமான்,

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கடந்த ஆட்சியில் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான வயது உச்ச வரம்பு நிர்ணயத்தை, ரத்து செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

- தமிமுன் அன்சாரி,

ம.ஜ.க., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X