சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு பெண்கள் உட்பட 7 பேர் கைது

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை-போலி ஆவணங்கள் வாயிலாக, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த, மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் லீலாகுமாரி. இவருக்கு, அதே பகுதியில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை பராமாரிக்க, 2015ல், சாதிக் பாஷா என்பவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவு

சென்னை-போலி ஆவணங்கள் வாயிலாக, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த, மூன்று பெண்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் லீலாகுமாரி. இவருக்கு, அதே பகுதியில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை பராமாரிக்க, 2015ல், சாதிக் பாஷா என்பவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.பின், சாதிக் பாஷா நடவடிக்கை சரியில்லாததால், பொது அதிகார பத்திரப்பதிவை ரத்து செய்தார். எனினும், சாதிக் பாஷா, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த உஷா சக்திவேல், 37 என்பவரை, லீலாவதி போல ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் வாயிலாக நிலத்தை அபகரித்து உள்ளார்.இதற்கு, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சிவமணி, 38; பட்டாளம் அன்பழகன், 43; விருகம்பாக்கம் முகமது அப்சர், 32 உள்ளிட்டோர் உதவியாக இருந்துள்ளனர். நிலம் அபகரிக்கப்பட்டது குறித்து, லீலாகுமாரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, உஷா சக்திவேல், ஷெனாய் நகர் சுமதி சக்திவேல், 52; எம்.ஜி.ஆர்., நகர் ஜெயலட்சுமி, 59 உள்ளிட்ட ஏழு பேரை நேற்று கைது செய்தனர். சாதிக் பாஷாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X