பொது செய்தி

தமிழ்நாடு

காட்ராம்பாக்கம் ஏரியில் கட்டுமானம் 'சிப்காட்'க்கு உயர் நீதிமன்றம் தடை

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை-ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, காட்ராம்பாக்கம் ஏரியில், கட்டுமானங்கள் மேற்கொள்ள, 'சிப்காட்' நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் உள்ளிட்ட ஏழு விவசாயிகள் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, 94 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்த ஏரி நீரை நம்பி, 450 ஏக்கர் நிலம் உள்ளது.ஏரியை

சென்னை-ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, காட்ராம்பாக்கம் ஏரியில், கட்டுமானங்கள் மேற்கொள்ள, 'சிப்காட்' நிறுவனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் உள்ளிட்ட ஏழு விவசாயிகள் தாக்கல் செய்த மனு:எங்கள் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, 94 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்த ஏரி நீரை நம்பி, 450 ஏக்கர் நிலம் உள்ளது.ஏரியை ஆக்கிரமிக்க, சிப்காட் நிறுவனம் பலமுறை முயற்சிகள் செய்தது. தொழிற்சாலை பயன்பாட்டுக்கும், வாகனங்களை நிறுத்தவும், ஏரியை ஆக்கிரமித்தனர்.கடந்த 2016ம் ஆண்டில், டிரக் வாகனங்கள் நிறுத்துவதற்கு, ஏரியில் பெரும் பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. பத்து ஏக்கருக்கும் மேல், ஏரி பகுதி நிரப்பப்பட்டு, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. 45 நாட்களுக்கு முன், ஏரியின் உள்பகுதியில் 6 ஏக்கரில் வேலி அமைக்கும் பணியை, சிப்காட் துவங்கியது.இதற்கு ஆட்சேபனை தெரிவித்தோம். இருந்தும், வேலி அமைக்கும் பணியை முடித்து விட்டனர். ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, காட்ராம்பாக்கம் ஏரியில், கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. ஏரியில், கட்டுமானப் பணிகள் உட்பட எந்த பணிகளும் மேற்கொள்ள, சிப்காட் நிறுவனத்துக்கு, நீதிபதிகள் தடை விதித்தனர். விசாரணையை, நவ., 8க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X