பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேடல் குழு: மூபா வலியுறுத்தல்

Added : அக் 09, 2021
Share
Advertisement
மதுரை:'மதுரை காமராஜ் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் தேடல் குழு விரைவில் அமைக்க வேண்டும்' என பல்கலை ஆசிரியர் சங்கம் (மூபா) வலியுறுத்திஉள்ளது.இதுகுறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு 'மூபா' தலைவர் புவனேஸ்வரன், செயலாளர் சதாசிவம்,பொருளாளர் பாலசுப்பிரமணியம், இணை செயலாளர் ராகூர்கனி அனுப்பிய கடிதம் விவரம்:இப்பல்கலையில் ஆக., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.

மதுரை:'மதுரை காமராஜ் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் தேடல் குழு விரைவில் அமைக்க வேண்டும்' என பல்கலை ஆசிரியர் சங்கம் (மூபா) வலியுறுத்திஉள்ளது.

இதுகுறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு 'மூபா' தலைவர் புவனேஸ்வரன், செயலாளர் சதாசிவம்,பொருளாளர் பாலசுப்பிரமணியம், இணை செயலாளர் ராகூர்கனி அனுப்பிய கடிதம் விவரம்:இப்பல்கலையில் ஆக., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.

தற்போது உயர்கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் கன்வீனர் குழு செயல்படுகிறது. பல்கலை விதிப்படி புதிய துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெறவேண்டிய மூன்று நபர் குழுவில், சிண்டிகேட் பிரதிநிதியாக தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், செனட் பிரதிநிதியாக முன்னாள் துணைவேந்தர் மருதமுத்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கவர்னர் பிரதிநிதியான ஒருங்கிணைப்பாளரை (கன்வீனர்) விரைவில் அறிவித்து அரசிதழில் வெளியிட்டு புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X