பொது செய்தி

தமிழ்நாடு

கொடுத்த கரும்புக்கு ஓராண்டு கழித்து பணம் மத்திய அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு

Added : அக் 09, 2021
Share
Advertisement
மதுரை:ஆலைக்கு விவசாயிகள் கொடுத்த கரும்புக்கான 40 சதவீத பாக்கி தொகையை வழங்க ஓராண்டு வரை அவகாசம் அளிக்கும் மத்திய அரசின் புதிய உத்தரவு, வாழ்வாதாரத்தை பறிப்பதாக பாரதிய கிசான் சங்க தேசிய செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:மத்திய அரசின் கரும்பு சட்டம் 1996 ன் படி ஆலைகளுக்கு கரும்பு கொடுத்தால் 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும்.

மதுரை:ஆலைக்கு விவசாயிகள் கொடுத்த கரும்புக்கான 40 சதவீத பாக்கி தொகையை வழங்க ஓராண்டு வரை அவகாசம் அளிக்கும் மத்திய அரசின் புதிய உத்தரவு, வாழ்வாதாரத்தை பறிப்பதாக பாரதிய கிசான் சங்க தேசிய செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:மத்திய அரசின் கரும்பு சட்டம் 1996 ன் படி ஆலைகளுக்கு கரும்பு கொடுத்தால் 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும். அதற்கு மேல் தாமதம் செய்தால் 15 சதவீத வட்டியுடன் தொகையை செலுத்த வேண்டும் என இருந்தது. கடந்த மாதம் மத்திய அரசின் சி.ஏ.சி.பி. (கரும்புக்கான கமிஷன்) மற்றும் நிதிஆயோக் இணைந்து புதிய செயல்உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி விவசாயிகளிடம் கரும்பை வாங்கும் ஆலைகள் முதல் மாதத்தில் 30 சதவீதம், 2வது மாதத்தில் 30 சதவீத தொகையை செலுத்த வேண்டும். மீதி 40 சதவீத தொகையை ஓராண்டுக்குள் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இது ஆலைகளுக்கு சாதகமாகவும் விவசாயிகளுக்கு பாதகமாகவும் உள்ளது.

நாங்கள் வங்கியில் பயிர்க்கடன் பெற்று கரும்பு சாகுபடி செய்கிறோம். ஓராண்டுக்குள் கடனை அடைத்தால் 4 சதவீத வட்டி, அதற்கு மேல் கடன் கட்ட தவறினால் 16 சதவீத வட்டி கட்ட வேண்டும். ஆலைகள் ஓராண்டு கழித்து கரும்புக்கான தொகையை கொடுத்தால் நாங்கள் எப்படி வங்கி கடனை அடைக்க முடியும். சாகுபடி செய்ததற்கான ஊதியத்தை கூட பெற முடியாது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X