காங்., பலவீனமாக உள்ளது பிரசாந்த் கிஷோர் தாக்கு| Dinamalar

காங்., பலவீனமாக உள்ளது பிரசாந்த் கிஷோர் தாக்கு

Added : அக் 09, 2021
Share
புதுடில்லி:''பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது'' என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரசை மறைமுகமாக சாடியுள்ளார்.தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகவும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பிரசாந்த் கிஷோரை

புதுடில்லி:''பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது'' என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரசை மறைமுகமாக சாடியுள்ளார்.

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகவும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பிரசாந்த் கிஷோரை காங்கிரசில்சேர்ப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரசாந்த்கிஷோர் கூறியுள்ளதாவது:உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த சம்பவத்துக்கு பின் பழம்பெரும் கட்சியின்தலைமையில் எதிர்க்கட்சிகள் விரைவாக மீண்டெழ வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X