பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் திறக்காவிட்டால் போராட்டம்: ஹிந்து முன்னணி எச்சரிக்கை

Added : அக் 09, 2021
Share
Advertisement
தொண்டாமுத்துார்:''கோயிலை திறக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.கோவை மாவட்ட ஹிந்து முன்னணியின் பொதுக்குழு கூட்டம் பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நேற்று நடந்தது.கூட்டத்தில் 'தி.மு.க. அரசு முகலாயர் ஆட்சியை போல் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. புரட்டாசி அமாவாசை

தொண்டாமுத்துார்:''கோயிலை திறக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

கோவை மாவட்ட ஹிந்து முன்னணியின் பொதுக்குழு கூட்டம் பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நேற்று நடந்தது.கூட்டத்தில் 'தி.மு.க. அரசு முகலாயர் ஆட்சியை போல் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. புரட்டாசி அமாவாசை தினத்தன்று கோயில்கள்பூட்டியதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

கோவையில் மாநகராட்சி இடத்தை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து மீட்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோவை மாநகர் மாவட்டத்தில் 400 புதிய நிர்வாகிகள் நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில் ''தமிழகத்தில் பஸ் போக்குவரத்து டாஸ்மாக் கடை பள்ளி கல்லுாரிகள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலை மட்டும் மூடுகின்றனர். தி.மு.க. ஹிந்து விரோத கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கோவிலை திறக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X