பொது செய்தி

இந்தியா

மின்சார கார் தயாரிக்க டெஸ்லா நிறுவனத்திற்கு கட்கரி அழைப்பு

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க வரும்படி அமெரிக்காவைச் சேர்ந்த, டெஸ்லா நிறுவனத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், மின்சார கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.உறுதிஇந்நிலையில் டில்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை

புதுடில்லி-இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க வரும்படி அமெரிக்காவைச் சேர்ந்த, டெஸ்லா நிறுவனத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news


அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், மின்சார கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.உறுதிஇந்நிலையில் டில்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மின்சார கார், டெஸ்லாவின் மின்சார காரை விட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. இருந்த போதிலும் சீனாவில் தொழிற்சாலை அமைத்து மின்சார கார் தயாரிப்பது போல, இந்தியாவிலும் மின்சார கார் தயாரிக்க வரும்படி டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

தொழிற்சாலை அமைக்க தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும் என்றும் உறுதி அளித்துள்ளேன். டெஸ்லா, இந்திய நிறுவனங்களிடம் இருந்து கார் உதிரி பாகங்களை வாங்குகிறது. அதனால் இங்கேயே மின்சார கார் தயாரிப்பை துவக்குவது, டெஸ்லாவுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு துவங்கியுள்ள நிலையில் டெஸ்லா இங்கு தொழிற்சாலை அமைத்தால் ஏற்றுமதியும் செய்யலாம்.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 40 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட காருக்கு, 60 - 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. டெஸ்லா, சீனாவில் இருந்து மின்சார காரை இறக்குமதி செய்து விற்க திட்டமிட்டுள்ளது. கோரிக்கைஅதனால் கார் இறக்குமதிக்கான சுங்க வரியை 40 சதவீதமாக குறைக்கும்படி டெஸ்லா கோரிக்கை விடுத்துள்ளது. 'முதலில் இந்தியாவில் கார் தயாரிப்பை துவக்கிய பின், வரி குறைப்பு பற்றி பரிசீலிக்கலாம்' என, மத்திய அரசு டெஸ்லாவிடம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையால் டெஸ்லா, இந்தியாவுக்கு வருவது தாமதமாகிறது. எனினும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார கார் வினியோக மையங்களை டெஸ்லா அமைத்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-அக்-202114:01:48 IST Report Abuse
சம்பத் குமார் 1). டெஸ்லா காரின் Ground clearance very low கிரவுண்ட் கிளயரனனசு மிக குறைவானது. அது இந்திய சாலைகளுக்கு ஏற்றது அல்ல.2). நமது டாடா, மகேந்திரா, மாருதிரி போன்ற இந்திய வாகன உற்பத்தியாளர்களை இதில் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். 4). பேட்ரி சார்ஜிங் Outlets களை வேளையில்லா இளைஞர்களுகு வழங்க வேண்டும்.5). திரும்ப திரும்ப சார்ஜிங் outletகளை Petrol Bunkகளுக்கு வழங்கி அவர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்க கூடாது.6). குறைந்தது பத்து வருடங்களுக்கு எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அதை சார்ந்த உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் நல்ல தரமான வரி சலுகை வழங்க வேண்டும்.7). வண்டியை வாங்கும் வாடிக்கையாளருக்கு மானியம், குறைந்த வட்டி விகிதம், குறைவான விலையில் வண்டியை வழங்க வேண்டும்.8). எலெக்ட்ரிக் வாகனங்களை வரவேற்போம். நன்றி ஐயா.
Rate this:
Cancel
09-அக்-202106:03:20 IST Report Abuse
அப்புசாமி தமிழ்நாட்டில் மட்டும் எந்த தொழிற்சாலையும் தொடங்காதீங்க. ஃபோர்டு, நிஸ்ஸான் மாதிரி ஓடிப் போக செஞ்சுருவாங்க.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
09-அக்-202102:51:47 IST Report Abuse
Venkatakrishnan டெஸ்லா கார் ஓடுற அளவுக்கு மொதல்ல நல்ல ரோடு கெடயாது... ரோடு இருந்தாலும் ஒவ்வொரு 50 கிலோமீட்டருக்கு டோல் கேட் போட்டு காசு புடுங்க வேண்டியது... இந்த லட்சணத்துல டெஸ்லா கார் ஓட்டணுமா?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
09-அக்-202106:53:44 IST Report Abuse
 Muruga Velநீங்க சைக்கிள் ஓட்டுங்க ..கார் ஓட்டலியேன்னு யார் அழுதாங்க ..டெக்ஸாஸ் மாகாணத்தில் நகருக்குள்ளேயே சீக்கிரம் பயணிக்க பணம் கட்டணும் .....
Rate this:
09-அக்-202112:25:40 IST Report Abuse
அப்புசாமிசீனாவுலே யாரும் டெஸ்லா ஓட்டுறதில்லே. எல்லாம் ஏற்றுமதிதான். இங்கேயும் அடிமாட்டு கூலி விலைக்கு உற்பத்தி செஞ்சு அமெரிக்காவுக்கு விக்கப் பாப்பாங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X