தங்க கடத்தல் ஸ்வப்னா கைது ரத்து: ஐகோர்ட் உத்தரவு

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
திருவனந்தபுரம்-'கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை, 'காபிபோசா' சட்டத்தின் கீழ் சுங்கத்துறை கைது செய்தது செல்லாது' என, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளாவுக்கு கடந்த

திருவனந்தபுரம்-'கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை, 'காபிபோசா' சட்டத்தின் கீழ் சுங்கத்துறை கைது செய்தது செல்லாது' என, கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.



latest tamil news


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளாவுக்கு கடந்த ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் உட்பட பலரை, என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.


latest tamil news


இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் மீது காபிபோசா எனப்படும் அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து, சுங்கத்துறை கைது செய்தது. காபிபோசா சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணை இன்றி ஒரு ஆண்டு தடுப்பு காவலில் வைக்கலாம்.இந்நிலையில் காபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, அவரது தாயார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காபிபோசா சட்டத்தில் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
14-அக்-202117:53:31 IST Report Abuse
DVRR கம்ம்யூனிஸ்ட் முதல்வர் உத்தரவை மீற முடியாது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-அக்-202105:03:45 IST Report Abuse
meenakshisundaram எனக்கு ஒரு சந்தேகம் அப்போ கடத்தல் தொழிலை மீண்டும் செய்யலாமா ?கத்தினா தங்கத்தை அவுக வச்சுக்கலாமா ?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
10-அக்-202117:04:08 IST Report Abuse
M  Ramachandran வருங்காலத்தில் இஙகும் அது ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
13-அக்-202120:00:19 IST Report Abuse
ayyo paavam naanவருங்காலத்தில் என்ன? இதற்கு முன்பும் இவ்வளவு பிரபலமடையாத வழக்குகளில் சிலர் விடுவிக்கப்பட்டு இருக்கலாம். அதை வைத்து தான் புதிய குற்றங்களை செய்ய முயல்வோர் கொஞ்சம் ஆசையுடன் முயற்சி செய்கின்றனர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X