பொது செய்தி

இந்தியா

பிரிட்டன், இந்தியா இடையேயான விமான பயண கட்டுப்பாடு சர்ச்சை; ஜெய்சங்கர் ஆலோசனை

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-இருநாடுகளுக்கு இடையிலான மக்களின் பயணம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சருடன், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.அச்சுறுத்தல்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் செல்லும் இந்தியர்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் சென்று இறங்கியதும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு

புதுடில்லி-இருநாடுகளுக்கு இடையிலான மக்களின் பயணம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சருடன், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.



latest tamil news


அச்சுறுத்தல்கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் செல்லும் இந்தியர்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் பிரிட்டன் சென்று இறங்கியதும், 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 'கோவிஷீல்டு' தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தாலும் அதை பிரிட்டன் ஏற்க மறுத்தது.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரிட்டனில் இருந்து வரும் பயணியருக்கும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

பயணத்திற்கு முன் ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை செய்வது, இந்தியா வந்த பின் தனிமைப்படுத்துதல் உள்ளட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.இதையடுத்து இந்திய பயணியருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி, பிரிட்டன் அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.'அங்கீகரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களை செலுத்தி வரும் இந்தியர்கள், பிரிட்டனில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை' என, அறிவிக்கப் பட்டது.


latest tamil news


இந்நிலையில் நேற்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ்ஸை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.டுவிட்டர்அந்த கலந்துரையாடல் குறித்து ஜெய்சங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில், 'பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சருடனான உரையாடல் நல்ல விதமாக அமைந்தது.'இருநாடுகளுக்கு இடையிலான மக்களின் பயணத்தை எளிதாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-அக்-202112:37:48 IST Report Abuse
Gopalakrishnan S அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
Rate this:
Cancel
09-அக்-202108:50:41 IST Report Abuse
அப்புசாமி சீனா போக விசா கிடைக்க வழி பண்ணுங்கய்யா.... அங்கேருந்து ஆளுங்க வர்ராங்க. கோடிக்கணக்கில் பொருள் இறக்குமதி பண்றோம்.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
09-அக்-202102:58:23 IST Report Abuse
Sankar Ramu அவனவன்னுக்கு புரியுற பாழையில பேசினாதான் கேட்கிறானுங்க. தமிழ்மானிலத்ல இந்து கோவிளை முழுசா திறக்க தி மு க பாழையில பேச வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X