பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அரசியல்வாதிகளே வகுப்பறைக்குள் நுழையாதீர்!

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (94)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வி.எஸ்.வெங்கடாசலம், செங்கோட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட்
அரசியல்வாதிகள், வகுப்பறை, நுழையாதீர்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வி.எஸ்.வெங்கடாசலம், செங்கோட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

அண்ணா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக, முதல்வர் ஸ்டாலினின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை நியமித்துள்ளனர்.எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார்.

இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.துறை நிபுணர், முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி போன்றோர் சிண்டிகேட் உறுப்பினராக வேண்டும். அது தான், பல்கலையின் வளர்ச்சிக்கு நல்லது. அதை எம்.எல்.ஏ.,வுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ வழங்குவது நீதியே அல்ல.அரசியல்வாதிகள், பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக இருப்பதால் என்ன பலன்?ஒருவர் படிப்பறிவு இல்லாதவராக இருந்தாலும் கூட, எம்.எல்.ஏ., - எம்.பி., பதவி வகிப்பதற்கு, நம் நாட்டின் ஜனநாயகம் உரிமை வழங்கி இருக்கிறது; இது வரவேற்க வேண்டிய விஷயம்.


latest tamil news


ஆனால் கல்வி நிலையங்களில் அப்படி பதவி வழங்க கூடாது. துறை ரீதியாக நிபுணத்துவம் பெற்ற நபர்களை தான் சிண்டிகேட், செனட் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.கல்வி நிலையங்களில் அரசியல் நுழைவது சரியானது அல்ல. அரசியல் செய்வதற்கு சட்டசபையே போதும்; வகுப்பறை தேவையில்லை!

Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
11-அக்-202122:57:53 IST Report Abuse
DARMHAR முன்னொரு காலத்தில் கருணாநிதிக்கு அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டபின் சில துயரமான நிகழ்வுகள் நடந்தன.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-அக்-202101:58:19 IST Report Abuse
BASKAR TETCHANA அடுத்து நம்ம ஆட்சி தலைவர் சொல்லி விட்டார் முதல் கை எழுத்து நீட்டுக்கு தான் இரண்டாவது விவசாயிகள் 5 பவ்உன் நகை வங்கியில் வைத்து இருந்தால் உடனே மீட்டு கொள்ளலாம் சீக்கிரம் பொங்கல் நகைகளை அடைமமானம் வைத்து பணம் பெறுங்கள் எல்லா கடனும் ரத்து என்று சொன்னவன் இன்று மக்கள் படும் வேதனை தெரியாமல் நடிகைகளுடன் நடிக்க பொய் விட்டான். இதற்க்கு தான் இவனை தேர்ந்தெடுத்திர்களா சேப்பாக்கம் தொகுதி மக்களே. மேலும் அண்ணா யூனிவேறுசிட்டியில் கமிட்டி மெம்பராக வேறு இவனுக்கு. அங்கு மருத்துவர் பட்டம் கிடைக்கும் என்று போட்டு இருக்கிறான் அவன் அப்பன். எப்படியாவது படிக்காமல் டொக்டர் பட்டம் வாங்க வேண்டும். இதெல்லாம் உறுப்பிடாது. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
09-அக்-202122:49:16 IST Report Abuse
venkatan கல்வி யில் ஜனநாயகம் நுழைவது மிக நல்லது.ஆனால் அப்பேற்பட்ட நபர் அரசியல் அறிவியலில் குறைந்து 2 வருட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர்ப் பட்டம் விரும்பத்தக்கது வாழ்க சனநாயகம் வீழ்க கல்லாமை. வளர்க பிறரது நிதிகளின் கருவூலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X