பொது செய்தி

இந்தியா

மலேரியாவுக்கான தடுப்பூசி தயாரிக்கிறது 'பாரத் பயோடெக்'

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஐதராபாத்,-பிரிட்டன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மலேரியா காய்ச்சலுக்கான உலகின் முதல் தடுப்பூசியை, இந்தியாவில் 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்க உள்ளது.கொசுக்கடியால் ஏற்படும் மலேரியா காய்ச்சலால், ஆண்டுதோறும் உலகம் முழுதும் சராசரியாக நான்கு லட்சம் உயிர் இழப்புகள் பதிவாகின்றன. கடந்த 1987ல் மலேரியா காய்ச்சலை தடுக்க, 'மாஸ்குயிரிக்ஸ்' என்ற தடுப்பூசியை,

ஐதராபாத்,-பிரிட்டன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மலேரியா காய்ச்சலுக்கான உலகின் முதல் தடுப்பூசியை, இந்தியாவில் 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்க உள்ளது.



latest tamil news


கொசுக்கடியால் ஏற்படும் மலேரியா காய்ச்சலால், ஆண்டுதோறும் உலகம் முழுதும் சராசரியாக நான்கு லட்சம் உயிர் இழப்புகள் பதிவாகின்றன. கடந்த 1987ல் மலேரியா காய்ச்சலை தடுக்க, 'மாஸ்குயிரிக்ஸ்' என்ற தடுப்பூசியை, பிரிட்டனைச் சேர்ந்த ஜி.எஸ்.கே., எனப்படும் 'கிளாக்ஸோ ஸ்மித் கிளைன்' என்ற நிறுவனம் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்காக 2019 முதல் எட்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு, இந்த மேம்படுத்தப்பட்ட மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்த மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியான இதை, இந்தியாவில் 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


latest tamil news


எனினும் இதன் தயாரிப்பு பணிகள் துவங்க சில ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜி.எஸ்.கே., நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, பாரத் பயோடெக் நிறுவனம் பரிமாற்றம் செய்து கொள்ள உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜனவரியில் கையெழுத்தாகி உள்ளது.தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம், ஏற்கனவே கொரோனா வைரசுக்கான 'கோவாக்சின்' தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-அக்-202108:50:59 IST Report Abuse
சங்கிமக்கா வாழ்த்துக்கள்.. பெருமித தருணம்..
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
09-அக்-202106:42:01 IST Report Abuse
 Muruga Vel கொசுக்கடிக்கு ..பாம்புக்கடிக்கு ..நாய்க்கடிக்கு ... இவற்றுக்கு தடுப்பூசி தேவை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X