பொது செய்தி

தமிழ்நாடு

காரியாபட்டி அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Added : அக் 09, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : காரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் அதிக அளவு முதுமக்கள் தாழிகள் இருப்பதாக, அதே ஊரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பார்த்திபகண்ணன், அருப்புக்கோட்டை பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் ஸ்ரீதர், மதுரை அருண்சந்திரன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் தாமரைக்கண்ணன் கூறினர்.கள ஆய்வு செய்த அவர்கள் கூறியதாவது: கிழவனேரியில்பெரு ஊரணி என்ற பெரிய
 காரியாபட்டி அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை : காரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் அதிக அளவு முதுமக்கள் தாழிகள் இருப்பதாக, அதே ஊரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பார்த்திபகண்ணன், அருப்புக்கோட்டை பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் ஸ்ரீதர், மதுரை அருண்சந்திரன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் தாமரைக்கண்ணன் கூறினர்.

கள ஆய்வு செய்த அவர்கள் கூறியதாவது: கிழவனேரியில்பெரு ஊரணி என்ற பெரிய நீர்நிலை உள்ளது. இதன் அருகே சிறு ஓடை செல்கிறது. இதையடுத்து பெரிய காடு உள்ளது. அங்கு தான் மூதாதையரின் வரலாற்று தொல்லியல் எச்சங்கள் நிரம்பி கிடக்கின்றன.காட்டு பகுதியில் 2 முதல் 3 கி.மீ., சுற்றளவிற்கு எங்கு பார்த்தாலும் முதுமக்கள் தாழியின் ஓடுகள் சிதறி கிடக்கிறது. ஏற்கெனவே பெய்த மழையில் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக முழுமையாக வெளியில் தெரிந்த முதுமக்கள் தாழியை ஆய்வு செய்த போது, நமது மூதாதையரின் முழுமையான பல் , சிறு மண் முட்டிகள் காணப்பட்டன. இறந்தவர்கள் என்றேனும் ஒரு நாள் உயிர் பிழைக்க கூடும் என கருதி, தாழியின் உள்ளே உடலோடு வைக்கப்பட்ட சிறு சிறு மண்பாண்டங்களில் உணவும், நீரும், நீர் அருந்த சிறு குடுவையும், சிறிய தட்டும் வைக்கப்பட்டு வந்துள்ளது.

தாழியின் வாய்பகுதி 2 அரை இன்ச்தடிமன்னிலும், சிறு குடுவைகள் முறையே கால், அரை, முக்கால், ஒரு இன்ச் தடிமன்னிலும் உள்ளது. ஓடுகள் கருப்பு , சிவப்பு வண்ணங்களில் காணப்படுகிறது. மேற்புறத்தில் அழகிய வேலைபாடுகள் உள்ளன. பழங்கால தமிழகத்தில் ஒருவர் இறந்த பின், அவரது உடலை அல்லது எலும்புகளை, அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்து புதைப்பது வழக்கம். இந்த தாழிகள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க இரும்பு கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். விரிவான ஆய்வு மேற் கொண்டால் இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X