தமிழ்நாடு

நீர்வழி புறம்போக்கு நிலத்திற்குபட்டா வழங்கிய அதிகாரிகள்

Added : அக் 09, 2021
Share
Advertisement
சிவகங்கை : திருப்புத்துார் அருகே மேலாயன் கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் பகுதியில் உள்ள நீர் வழி புறம்போக்கு நிலத்தினை பட்டா போட்ட அதிகாரிகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. பட்டாவை ரத்து செய்யாவிடில் நவ., 10 ல் காத்திருப்பு போராட்டம்நடத்த முடிவு செய்துள்ளனர்.மேலாயன்பட்டி கண்மாய் நிறைந்து மறுகால் செல்லும் நீர் வழி புறம்போக்கு, மற்றும் குடிநீர் ஊரணி,

சிவகங்கை : திருப்புத்துார் அருகே மேலாயன் கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் பகுதியில் உள்ள நீர் வழி புறம்போக்கு நிலத்தினை பட்டா போட்ட அதிகாரிகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.

பட்டாவை ரத்து செய்யாவிடில் நவ., 10 ல் காத்திருப்பு போராட்டம்நடத்த முடிவு செய்துள்ளனர்.மேலாயன்பட்டி கண்மாய் நிறைந்து மறுகால் செல்லும் நீர் வழி புறம்போக்கு, மற்றும் குடிநீர் ஊரணி, மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் வீட்டு மனைகள் கட்டுவதற்கான அனுமதியும்வழங்கப்பட்டுள்ளது. இது போன்று வருவாய்த்துறை அதிகாரிகளின் செயல்பாடு காரணமாககிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களின் பாசன வசதி கேள்விக்குறியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து தனி நபருக்கு போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும்.ஆறுமுகம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தெரிவித்ததாவது: வருவாய்த்துறை அதிகாரிகள் நீர் நிலை புறம்போக்கு, குடிநீர் ஊரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பட்டா வழங்கியுள்ளனர். அந்த இடத்தில் வீட்டு மனைகள் கட்டுவதற்கான அனுமதியும் அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நவ., 10 க்குள் தனிநபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யாவிட்டால் அப்பகுதி விவசாயிகள் சார்பில்திருப்புத்துார் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X