சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கு: தி.மு.க., எம்.பி., தலைமறைவு : கைது செய்ய போலீஸ் தீவிரம்

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
கடலுார் : பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தி.மு.க., எம்.பி., ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப்பதியப்பட்டுள்ளது. 5 பேர் கைதான நிலையில், எம்.பி.,யை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு(60). பனிக்குப்பத்தில் கடலுார் தி.மு.க., எம்.பி., ரமேஷின், முந்திரி

கடலுார் : பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தி.மு.க., எம்.பி., ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப்பதியப்பட்டுள்ளது. 5 பேர் கைதான நிலையில், எம்.பி.,யை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



latest tamil news



கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு(60). பனிக்குப்பத்தில் கடலுார் தி.மு.க., எம்.பி., ரமேஷின், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். செப். 19ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக நேற்று மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக, ரமேஷ் எம்.பி., அவரது உதவியாளர் பண்ருட்டியைச் சேர்ந்த நடராஜ், சக தொழிலாளிகள் அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் 302(கொலை), 201 (தடயம் மறைப்பது), 149 (சதிதிட்டம்), 120b (கூட்டு சதிதிட்டம்) 147- (-5 பேருக்கு மேல் கூட்டாக சேர்நது தாக்குதல்) 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


latest tamil news



அப்போது ரமேஷ் எம்.பி.,யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நள்ளிரவு 12:00 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதி கூறும் போது ரமேஷ் எம்.பி., மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை தேடி வருவதாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-202104:27:34 IST Report Abuse
meenakshisundaram திமுக இப்படி சொல்லலாம் _நாங்கள் 'கொலை தன்மையை 'தான் எதிர்க்கிறோம் கொலையாளிகளை அல்ல ?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-அக்-202104:23:37 IST Report Abuse
meenakshisundaram பேஷ் பேஷ் நன்னா இருக்கு ?திமுக எம்பீ தொழிற்சாலையில் 'கொலை 'முதலமைச்சர் வீட்டு முன்னால் தற்கொலை '? எங்கே போகுது தமிழகம் ?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
09-அக்-202121:44:05 IST Report Abuse
BASKAR TETCHANA அம்மா கோமதி அவர்களே.நேர்மையாக நடந்து அந்த கொலைக்குற்றவாளியை கண்டு பிடித்து காவல் துறைக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுங்கள். பெயரை காப்பாற்றுங்கள். அவன் எங்கும் போக மாட்டான் சரவணன் வக்கீல் வீட்டில் இல்லையென்றால் கண்ணதாசன் திருமாவளவன் வீட்டில் இருப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X