'கிரீன் கார்டு' தாமதத்தை தவிர்க்க உத்தரவு: இந்தியர்கள் மகிழ்ச்சி

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' வழங்குவதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு 'கிரீன் கார்டு' பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது.அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப
 'கிரீன் கார்டு' தாமதத்தை தவிர்க்க உத்தரவு

வாஷிங்டன்:அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' வழங்குவதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு 'கிரீன் கார்டு' பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது.அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் 'எச் ௧ பி' விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.


latest tamil news


இவர்களில் பலர் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி கூறியதாவது:கிரீன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உலகம் முழுதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது தடைபட்டுள்ளது.அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது நீக்கப்பட்டு விட்டன.

அதனால் கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என, அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். எனவே கிரீன் கார்டு வழங்கும் பணிவிரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பைடனின் உத்தரவு அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugesan - San Jose,யூ.எஸ்.ஏ
09-அக்-202121:46:05 IST Report Abuse
Murugesan மோடி வருகைக்கும் இதற்கும் துளி சம்பந்தம் இல்லை மற்றும் இது இந்திய ஊடகங்களால் பரப்பப்படும் செவி வழிச்செய்தி Biden மற்றும் தனியாக கிறீன் கார்டு விஷயத்தில் முடிவு எடுக்க இயலாது மேலும் இது சட்டமானால் எல்லா நாட்டு குடிமகன்களுக்கும் பொருந்தும் இந்தியர்களுக்கு மட்டும் அல்ல ....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-அக்-202120:24:23 IST Report Abuse
Ramesh Sargam நமது பாரத பிரதமர் அமெரிக்க பயணம் முடிந்து ஒரு சில நாட்களிலேயே இந்த உத்தரவு. எதிர்க்கட்சிகள் மோடியின் இந்த அமெரிக்க பயணத்தினால் என்ன பயன் என்று கேட்டார்கள். ஒரு சிலர் வீண் செலவு என்றும் கூறினார்கள். இப்பொழுது அவர்களுக்கு புரிந்திருக்கும். போக போக அவர்களுக்கு தெரியும் மோடியின் அமெரிக்க பயணத்தினால் இந்தியாவுக்கு எப்படி எல்லாம் பலன் கிடைக்கிறது என்று.
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
09-அக்-202121:07:11 IST Report Abuse
chakraபிள்ளை குட்டியையாவது படிக்கச் வை...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
09-அக்-202121:27:21 IST Report Abuse
Barakat Aliரமேஷ் நீங்க சக்ராவின் பிள்ளை குட்டியை படிக்க வைங்க அவருடைய இறுதி ஆசையை நிறைவேத்துங்க...
Rate this:
Arun, Chennai. - chennai,இந்தியா
09-அக்-202121:34:46 IST Report Abuse
Arun, Chennai.சக்ரா, கரெக்ட்டா சொன்னீங்க.. ரமேஷ் மாதிரி ஆளுங்க இருக்கறவரைக்கும் நம்ம அரசியல் வாதீங்க திருந்த மாட்டாங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X