ஆர்யன் கானின் கார் ஓட்டுநரிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: ஆர்யன் கானின் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநரிடம் தற்போது என் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.தெற்கு மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் பயணித்தார். கப்பலில் நடந்த மது விருந்தில் திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நள்ளிரவில் சோதனை

மும்பை: ஆர்யன் கானின் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநரிடம் தற்போது என் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.



latest tamil news




தெற்கு மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் பயணித்தார். கப்பலில் நடந்த மது விருந்தில் திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நள்ளிரவில் சோதனை நடத்தியபோது சந்தேகத்தின் அடிப்படையில் ஆரியன் உட்பட 7 பேர் கைதாகினர்.

ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படாதபோதும் அவருக்கு தற்போது மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் வாட்ஸ் அப்பில் சங்கேத வார்த்தைகள் மூலமாக சாட் செய்துள்ளதாக என்சிபி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



தற்போது இந்த வழக்கு குறித்து என் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்யன் கான் தனது மும்பை வீட்டிலிருந்து துறைமுகத்துக்கு கார்மூலம் சென்று உள்ளார். இந்த காரை ஓட்டிய ஓட்டுநரிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை ஆடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேற்கொண்டு ஆர்யனுக்கு தொடர்புடைய பலரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
10-அக்-202119:06:44 IST Report Abuse
 Muruga Vel காரிலேயே சரக்கடித்ததால் டிரைவரிடம் விசாரணை ..
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
09-அக்-202120:30:22 IST Report Abuse
Vittalanand சாதாரண ஆளாக இருந்திருந்தால் லாடம் கட்டியிருப்பார்கள்கள். இவான் ஷாருக்கின் மகனாகியதால் டிரைவரை மாட்டி விட பார்க்கிறார்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-அக்-202120:20:16 IST Report Abuse
Ramesh Sargam PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X