பொது செய்தி

இந்தியா

எல்லையில் சீன கட்டுமானங்களால் நம் ராணுவம் கவலை:  எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நரவானே தகவல்

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : ''கிழக்கு லடாக்கை ஒட்டி தன் எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது கவலைக்குரிய விஷயம். அதே நேரத்தில் பயப்பட வேண்டியதில்லை; நம் ராணுவமும் தயார் நிலையில் உள்ளது,'' என, நம் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே குறிப்பிட்டார்.கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. நம் படைகள் சரியான பதிலடி
தாலிபான், ஜம்மு காஷ்மீர், ஆபத்து,எச்சரிக்கும், இந்திய ராணுவ பணியாளர், தலைவர்

புதுடில்லி : ''கிழக்கு லடாக்கை ஒட்டி தன் எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது கவலைக்குரிய விஷயம். அதே நேரத்தில் பயப்பட வேண்டியதில்லை; நம் ராணுவமும் தயார் நிலையில் உள்ளது,'' என, நம் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே குறிப்பிட்டார்.

கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. நம் படைகள் சரியான பதிலடி கொடுத்தன.பல சுற்று பேச்சுகளுக்கு பின், சில இடங்களில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின. இருப்பினும் சில இடங்களில் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. எல்லைப் பகுதியில் 60 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டு
உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் கிழக்கு லடாக்கையொட்டி தன் எல்லையில் சீன ராணுவம் பல்வேறு கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது.டில்லியில் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய, நம் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே இது குறித்து கூறியதாவது:

சீன ராணுவம் எல்லையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவது கவலைக்குரிய விஷயம் தான். எல்லையில் தன் படைகளை நிரந்தரமாக நிறுத்தி வைப்பதற்காக இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக கருதுகிறோம்.அதே நேரத்தில் இதற்காக பயப்படத் தேவைஇல்லை. நம் ராணுவமும் முழு அளவில் தயாராக உள்ளது. சீனாவுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு நம் ராணுவத்துக்கு தேவையான வசதிகளும் எல்லையில் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே, எல்.ஓ.சி., எனப்படும் எல்லை கட்டுப்பாடு பகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.

அதுபோல எல்லை கட்டுப்பாடு பகுதியை வரையறுக்கும் வகையில் சீனாவின் இந்த முயற்சிகள் இருப்பதாக கருதுகிறோம்.ஜம்மு - காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதற்கும், இதற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரடைந்த பின், அங்குள்ள பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீருக்குள் நுழைவதற்கு முயற்சி செய்வர்.
ஏற்கனவே தலிபான் ஆட்சி இருந்தபோதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கு நம் படைகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-அக்-202111:17:08 IST Report Abuse
அப்புசாமி எத்தனை நாளைக்கி சமாளிப்போம்னு சொல்லிக்கிட்டிருப்பீங்க. ஒரு தடவை ஏறி அடிக்க மாட்டீங்களா?
Rate this:
Cancel
10-அக்-202109:58:21 IST Report Abuse
Gopalakrishnan Sudhakar PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
10-அக்-202107:59:58 IST Report Abuse
Barakat Ali "அதை சமாளிப்பதற்கு நம் படைகள் தயார் நிலையில் உள்ளன." குடியரசு ஆகி எழுபதாண்டுகள் ஆன பிறகும் நாம் இன்னமும் இன்னல்களை சமாளிக்கும் அளவுக்குத்தான் வளர்ந்துள்ளோம் வாழ்க இந்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த காங்கிரஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X