'கிரீன் கார்டு' தாமதத்தை தவிர்க்க உத்தரவு

Added : அக் 09, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' வழங்குவதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு 'கிரீன் கார்டு' பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது. அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப

வாஷிங்டன்:அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' வழங்குவதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு 'கிரீன் கார்டு' பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது. அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் 'எச் ௧ பி' விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் பலர் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி கூறியதாவது:கிரீன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உலகம் முழுதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது தடைபட்டுள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது நீக்கப்பட்டு விட்டன. அதனால் கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என, அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். எனவே கிரீன் கார்டு வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பைடனின் உத்தரவு அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மகிழச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X