கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வாடகை வசூல் இழப்பீட்டை வசூலிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : அக் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஆதாயம் அடைந்தவர்களிடம், இழப்பீட்டு தொகையை வசூலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா, வெள்ளாளகுண்டத்தில், அரசு நிலம் மற்றும் நெடுஞ்சாலை நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, மின் வாரியத்துக்கும், வங்கிக்கும், தனி நபர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது குறித்து, அரசுக்கு

சென்னை:அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஆதாயம் அடைந்தவர்களிடம், இழப்பீட்டு தொகையை வசூலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா, வெள்ளாளகுண்டத்தில், அரசு நிலம் மற்றும் நெடுஞ்சாலை நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, மின் வாரியத்துக்கும், வங்கிக்கும், தனி நபர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது குறித்து, அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:சட்டத்தை மதிக்காமல், அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அதில் கட்டடம் கட்டி வாடகைக்கும் விட்டுள்ளனர். பேராசைக்காரர்கள் மாத வாடகையாக, 16 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்துள்ளனர். இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தொடர அனுமதித்தால், சட்டத்தை கையில் எடுத்து, தனிப்பட்ட ஆதாயத்துக்காகஅரசு நிலத்தை ஆக்கிரமிப்பர்.அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரதிருஷ்டவசமாக, இந்த வழக்கில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர். சமாதான கூட்டம் நடத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆக்கிரமிப்புகள் தொடர்பாக, சமாதான கூட்டம் நடத்தக் கூடாது. அதிகாரிகளும் கவனக்குறைவாக, கடமை தவறியவர்களாக இருந்து உள்ளனர்.எனவே, அரசு நிலத்தில், நெடுஞ்சாலை துறை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, நிலங்களை மீட்க சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின், நில பயன்பாடு, சேதம், நிதி இழப்பை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
10-அக்-202117:31:42 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரத்தில் சாலைகள் மற்றும் பொது இடம் வாய்க்கால் புறம்போக்கு நீர் ஆதாரங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அரசியல்வாதிகள் பயங்கரமாக வாடகை பணம் சம்பாதித்து வருகின்றனர் உண்மையான ஏழைகளுக்கு நல்ல மாற்று இடம் அல்லது வீடு கொடுத்து விட்டு பணம் படைத்த அரசியல்வாதிகள் அரசு அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாய் அகற்றிட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X