சில வரி செய்திகள்...: இந்தியா

Added : அக் 09, 2021
Share
Advertisement
85 கைதிகளுக்கு 'எய்ட்ஸ்'நாகான்: வட கிழக்கு மாநிலமான அசாமின் நாகான் மாவட்ட சிறை மற்றும் சிறையில் உள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி., பரிசோதனை நடந்தது. இதில் 85 கைதிகள் 'எய்ட்ஸ்' பாதிப்பிற்கு உள்ளானது உறுதியானது. ஒரே ஊசியை பயன்படுத்தி தங்களுக்குள் போதை மருந்து செலுத்திக்கொண்டதால், ஒருவரிடம் இருந்த பாதிப்பு பலருக்கும் பரவி உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமி

85 கைதிகளுக்கு 'எய்ட்ஸ்'

நாகான்: வட கிழக்கு மாநிலமான அசாமின் நாகான் மாவட்ட சிறை மற்றும் சிறையில் உள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி., பரிசோதனை நடந்தது. இதில் 85 கைதிகள் 'எய்ட்ஸ்' பாதிப்பிற்கு உள்ளானது உறுதியானது. ஒரே ஊசியை பயன்படுத்தி தங்களுக்குள் போதை மருந்து செலுத்திக்கொண்டதால், ஒருவரிடம் இருந்த பாதிப்பு பலருக்கும் பரவி உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுமி பலாத்காரம்: ஆசிரியர் கைது

போபால்: மத்திய பிரதேசத்தில், போபாலின் புறநகரில் உள்ள பெராசியாவில் வசிக்கும், 50 வயது அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கிணற்றில் அப்பகுதியினர் தண்ணீர் எடுப்பது வழக்கம். இதன்படி சமீபத்தில் தண்ணீர் எடுக்க வந்த, 10 வயது சிறுமியை, ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த அத்துமீறல் அடிக்கடி தொடர்ந்துள்ளது. இதை அறிந்த பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

வங்கி ஊழியர்கள் பலி

கார்கோன்: மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் பணியாற்றும் ஐந்து பேர் நேற்று முன்தினம் காரில் இந்துார் புறப்பட்டனர். நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் அவர்களின் கார் சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் மூவர் பலியாயினர்; காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வயலார் ராமவர்மா விருது

திருவனந்தபுரம்: கேரளாவில் 45ம் ஆண்டிற்கான வயலார் ராமவர்மா நினைவு இலக்கிய விருது பிரபல எழுத்தாளர் பென்யமினுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது 'மாந்தளிரில் 20 கம்யூனிஸ்ட் வருடங்கள்' என்ற புத்தகத்திற்காக 27ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. மாந்தளிர் என்ற கற்பனை கிராமத்தின் கலாசாரத்தில், 20 ஆண்டுகளாக அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றால் ஏற்பட்ட நிகழ்வுகளை, அரசியல் நையாண்டியுடன் இப்புத்தகம் விவரிக்கிறது.

மாணவர் சுட்டுக்கொலை

குர்கான்: ஹரியானாவின் குர்கானில் உள்ள ஒரு பல்கலையில் உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த வினீத் குமார் ஆயுர்வேத மருத்துவம் படித்து வந்தார். அதே பல்கலையின் மற்றொரு மாணவர் லக்கி. இவர் பல்கலை வளாகத்தில் வினீத் குமாரை நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். காதல் தொடர்பான பிரச்னையில் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ளதாக கூறிய போலீசார், தலைமறைவான லக்கியை தேடுகின்றனர்.

விமானப்படையில் சேர்ந்ததாக மோசடி

ஹர்தா: மத்திய பிரதேசத்தின் ஹர்தாவைச் சேர்ந்த பிங்கேஷ் கைத்வாஸ், சமீபத்தில் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து, தேச பக்தி பாடல்கள் இசைத்து வரவேற்பு கொடுத்தனர். உள்ளூர் பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியானது. தகவல் அறிந்த விமானப்படை அதிகாரிகள், அவர் பணியில் சேர்க்கப்படவில்லை என போலீசாருக்கு கடிதம் அனுப்பினர். வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான கைத்வாசை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X