மீனவர்களை காக்க ம.நீ.ம., கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களை காக்க ம.நீ.ம., கோரிக்கை

Added : அக் 09, 2021
Share
சென்னை:'மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் துணை தலைவர் தங்கவேலு அறிக்கை:நாகை மாவட்டம், நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்ட மீனவர்கள் 11 பேர், செப்., 30ம் தேதி இரவு, கொச்சி கடலோர பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். கடல் சீற்றம் காரணமாக, விசைப்படகு கவிழ்ந்து,

சென்னை:'மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சியின் துணை தலைவர் தங்கவேலு அறிக்கை:நாகை மாவட்டம், நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்ட மீனவர்கள் 11 பேர், செப்., 30ம் தேதி இரவு, கொச்சி கடலோர பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். கடல் சீற்றம் காரணமாக, விசைப்படகு கவிழ்ந்து, வலையும் மீனவர்களும் கடலில் மூழ்கினர்.

இதில், 11 மீனவர்கள், கொச்சி கடலோர காவல் படையினர் வாயிலாக மீட்கப்பட்டனர். அதேநேரம் 80 லட்சம் ரூபாய் மதிப்புடைய விசைப்படகும், 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய வலையும் கடலில் சிக்கின. படகும், வலையும் பறிபோனால், அந்த மீனவரின் வாழ்வாதாரம் பறிபோய்விடும் நிலையுள்ளது.

எனவே, அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை, கேரள அரசு எடுக்க வேண்டும். இதை, தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். மேலும், தமிழக மீனவப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், விசைப்படகு மற்றும் வலைக்கான சேதார தொகையை, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X