பொது செய்தி

இந்தியா

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Added : அக் 09, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று புதுடில்லி வந்தடைந்தார். வரவேற்ப்புஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தன் கணவர் போ டெங்பர்குடன் வந்த
 டென்மார்க் பிரதமர் மெட்டே பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புதுடில்லி:இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று புதுடில்லி வந்தடைந்தார். வரவேற்ப்புஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தன் கணவர் போ டெங்பர்குடன் வந்த டென்மார்க் பிரதமரை, பிரதமர் மோடி வரவேற்றார்.இதையடுத்து மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மெட்டே பிரெடெரிக்சன் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

பின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, டென்மார்க் பிரதமர் இருதரப்பு பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து, இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.சுகாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, பருவ நிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.இந்த சந்திப்பில் அறிவியல் தொழில்நுட்பம், பருவ நிலை மாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆகிய துறைகளில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.பெருமைஅப்போது டென்மார்க் பிரதமர் கூறியதாவது:நாட்டில் உள்ள 10 லட்ச குடும்பங்களுக்கு சுத்தமான நீரை வழங்கி சாதனைப் படைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இதர நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். என் அழைப்பை ஏற்று, டென்மார்க்கிற்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளது, பெருமை யாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, டென்மார்க் பிரதமர் மெட்டே சந்தித்துப் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X