பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 5வது 'மெகா' தடுப்பூசி முகாம்!

Added : அக் 09, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் இன்று நடக்க உள்ள ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம், இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக நபர்கள் பயன் பெறும் முகாமாக அமையும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.சென்னை மெரினா கடற்கரை பகுதியில், இரவு நேரங்களில் தங்கும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
 இன்று 5வது 'மெகா' தடுப்பூசி முகாம்!

சென்னை:''தமிழகத்தில் இன்று நடக்க உள்ள ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம், இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக நபர்கள் பயன் பெறும் முகாமாக அமையும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில், இரவு நேரங்களில் தங்கும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார். நரிக்குறவர் சமூக மக்களுக்கு, பழங்கள் மற்றும் ரொட்டி அடங்கிய கூடைகளை வழங்கினார்.


முதலிடத்தில் சென்னை

பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், அனைத்து நிலைகளிலும் வேகமாக நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வரை, ௫ கோடியே ௨ லட்சத்து 54 ஆயிரத்து 633 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேர், இரண்டாவது தவணையை 22 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 68.56 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 83 சதவீதம் பேர் முதல் தவணை, 40 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதில், சென்னை மாநகராட்சி தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் 4.80 லட்சம் கர்ப்பிணியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாலுாட்டும் தாய்மார்களில் 3.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


கலை நிகழ்ச்சிகள்

சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் வீடற்ற 2,245 பேருக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட 1,761 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கையாக, மெரினா கடற்கரையில் இரவு தங்கும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாத வகையில், அதிகம் பேர் பயன் பெறும் முகாமாக, இன்றைய முகாம் இருக்கும்.மக்கள் வீட்டின் அருகில் நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையை, 70 சதவீதமாக உயர்த்த பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X