சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கேழ்வரகில் வடியும் நெய்!'

Added : அக் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், 'நீட்' தேர்வை எதிர்த்து மாநில மாநாடு திருச்சியில் சமீபத்தில் நடந்தது.இதில், கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் பேசுகையில், 'நீட் தேர்வு என்பது, 4,000 மாணவர்களின் மருத்துவப் படிப்பு தொடர்பானது இல்லை. இது தமிழகத்தின் உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி சம்பந்தப்பட்டது. நீட் தேர்வு பிரச்னையில் மத்திய அரசு பின்வாங்கும் வரை, தமிழகம் தன்
 'கேழ்வரகில் வடியும் நெய்!'

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், 'நீட்' தேர்வை எதிர்த்து மாநில மாநாடு திருச்சியில் சமீபத்தில் நடந்தது.இதில், கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் பேசுகையில், 'நீட் தேர்வு என்பது, 4,000 மாணவர்களின் மருத்துவப் படிப்பு தொடர்பானது இல்லை. இது தமிழகத்தின் உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி சம்பந்தப்பட்டது. நீட் தேர்வு பிரச்னையில் மத்திய அரசு பின்வாங்கும் வரை, தமிழகம் தன் போராட்டத்தை கை விடாது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'என்னமோ தமிழகத்திற்கு மட்டும் தான் நீட் தேர்வு நடக்குற மாதிரி பேசுறார்... நாடு முழுதும் நடக்குற தேர்வுல, தமிழகத்திற்கு மட்டும் எப்படிங்க உரிமை பிரச்னை வரும்... மத்த அரசியல்வாதிகள் சொன்னா, அவங்க புரியாம பேசுறாங்கன்னு சொல்லலாம்... இவரு நிறைய படிச்சவரு... புரிஞ்சும், தப்பா பேசுறார்னா, எவ்வளவு அபத்தம் பாருங்க... இதை தான், கேட்கிறவன் கேணப்பயலா இருந்தால் கேழ்வரகில் நெய்யும் வடியும்ன்னு சொல்லுவாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'அண்ணாமலையாரே... இதெல்லாம் பெரிய விஷயமா?'



வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் அழிஞ்சிகுப்பம் ஊராட்சியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், 'மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய, தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினரா? முதல்வர் ஸ்டாலின், 2.50
லட்சம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளில் போகிறார்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், '2014 -- 2018- வரை, பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானத்தை பராமரிப்பதற்கு மட்டும் 1,088 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்காங்க... அதை ஒப்பிடும்போது, 2.50 லட்சம் ரூபாய் சைக்கிள் எல்லாம் துாசி...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'கம்யூ.,னிக்கள் ஜம்முன்னு இருக்கணுமே!'



மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், புதுக்கோட்டையில் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கிராம பஞ்சாயத்துக்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களில் 'ஆன்லைன்' பதிவு முறை தேவையற்றது...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'எதுக்கெடுத்தாலும் 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய பா.ஜ., ஆட்சியில்...' என கட்சி பெயரை அழுத்தி சொல்லி குறை சொல்லும் கம்யூ.,காரங்க, நெல் கொள்முதல் விஷயத்துல, தி.மு.க., அரசு என்பதை சொல்லவில்லை கவனிச்சிங்களா...'
என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'அது அவங்களுக்கும் தெரியும்... தி.மு.க., ஆட்சியில் என்ன நடந்தாலும், 'கம்'முன்னு இருந்தா தான், கம்யூ.,காரங்க தேர்தல்தோறும் பெட்டி வாங்கி, 'ஜம்'முன்னு இருக்க முடியும்...' என்றதும், சுற்றியிருந்தோர்
ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-அக்-202118:44:18 IST Report Abuse
D.Ambujavalli காற்றடித்த பக்கம் சாய்ந்தே கல்லாவை நிரப்புவதைத் தவிர கட்சியின் இருப்பை எவ்விதத்திலும் காட்ட முடியாதவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள் 1
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X