பொது செய்தி

இந்தியா

இரட்டை சிகரம் தொட்ட எல்லை பாதுகாப்பு படை

Added : அக் 09, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் கிழக்கு லடாக்கில் உள்ள இரட்டை சிகரங்களில் ஏறி, சாதனை படைத்துள்ளனர்.இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி., லாரி தோர்ஜி லாடு தலைமையிலான 20 பேர், கிழக்கு லடாக்கில் 6,250 மீ., மற்றும் 6,099 மீ., உயரத்தில் உள்ள இரட்டை சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளனர்.இது குறித்து, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

புதுடில்லி:இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் கிழக்கு லடாக்கில் உள்ள இரட்டை சிகரங்களில் ஏறி, சாதனை படைத்துள்ளனர்.

இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி., லாரி தோர்ஜி லாடு தலைமையிலான 20 பேர், கிழக்கு லடாக்கில் 6,250 மீ., மற்றும் 6,099 மீ., உயரத்தில் உள்ள இரட்டை சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளனர்.

இது குறித்து, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் கூறியதாவது: செப்., 28ல் லடாக்கில் உள்ள இரட்டை சிகரத்திற்கு மலையேறும் குழு புறப்பட்டது. இக்குழுவில் நான்கு பெண்கள் உட்பட லடாக் போலீசாரும் இடம் பெற்றிருந்தனர். இக்குழு வெற்றிகரமாக இரட்டைச் சிகரத்தில் ஏறி, இந்தியாவின் தேசியக் கொடியை நாட்டியது. இதில் 6,250 மீ., உயரமுள்ள சிகரத்திற்கு 'நுர்பு வாங்டஸ் சிகரம்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரகண்டில், கங்கோத்தி - 1 சிகரத்தில் ஏறிய இந்தோ - திபெத் பாதுகாப்பு படை தலைமை காவலர் நுர்பு வங்டஸ், பனிப்புயலில் சிக்கி உயிர்ழந்தார். அவர் நினைவாக, ஒரு சிகரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 1962ல் சீன போரைத் தொடர்ந்து இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப் பட்டது. இப்படை இந்தியா - சீனா இடையிலான 3,488 கி.மீ., எல்லையை பாதுகாக்கிறது. அத்துடன் உள்நாட்டு கலவரங்களை அடக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை இந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள், 223 முறை வெற்றிகரமாக மலை ஏறி சாதனை படைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X