சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?'

Added : அக் 09, 2021
Share
Advertisement
'இது நல்ல கதையாக இருக்கிறதே...' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை கிண்டலடிக்கின்றனர், அந்த மாநில பா.ஜ.,வினர். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், குஜராத் மாநிலம் ஆமதாபாதிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயில் சேவையை துவக்க திட்டமிட்டார்; இது, பிரதமர் மோடியின் கனவு திட்டம் என கூறப்பட்டது. வரும்,

அக்கம் பக்கம்	



சரிக்கட்ட முடியுமா?




'நமக்கு தலைவலியை ஏற்படுத்துவதற்காகவே புதிது புதிதாக கிளம்பி வருகின்றனர். முதல்வர் பதவியில் ஒரு நிமிடமாவது நிம்மதியாக அமர முடிகிறதா...' என கதறுகிறார், கோவா முதல்வரும், பா.ஜ., வைச் 
சேர்ந்தவருமான பிரமோத் சாவந்த். இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க முதல்வர் பிரமோத் சாவந்த், தீவிர முயற்சிகளில் 
இறங்கியுள்ளார். காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நேரம் பார்த்து, புடி கவோங்கர் என்ற சமூக ஆர்வலர், 'வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் பிரமோத் சாவந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்' என, அறிவித்துள்ளார். இது தான், பிரமோத் சாவந்திற்கு கவலையை 
ஏற்படுத்தி உள்ளது. கவோங்கரை சாதாரண ஆள் என ஒதுக்கி தள்ளி விட முடியாது. வி.எச்.பி., அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர். கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினார். 
இவர், கோவாவில் இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்களை திரட்டி, சுற்றுச் சூழல் தொடர்பாக போராட்டம் நடத்தி வருகிறார். கோவாவில் வசிக்கும் பழங்குடியின சமூக மக்களிடமும், இவருக்கு செல்வாக்கு உள்ளது.
இதனால், இவர் தேர்தலில் நின்றால் தோற்று விடுவோமோ என்ற பயம், பிரமோத் சாவந்திற்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 'கவோங்கரை எப்படி 
சரிக்கட்டுவது' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்.

'இது நல்ல கதையாக இருக்கிறதே...' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை கிண்டலடிக்கின்றனர், அந்த மாநில பா.ஜ.,வினர். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், குஜராத் மாநிலம் ஆமதாபாதிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரயில் எனப்படும் அதிவேக ரயில் சேவையை துவக்க திட்டமிட்டார்; இது, பிரதமர் மோடியின் கனவு திட்டம் என கூறப்பட்டது. வரும், 2023க்குள் இந்த திட்டப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு, வேலைகள் தீவிரமாக நடந்தன. மஹாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே முதல்வரானதும், புல்லட் ரயில் திட்டத்துக்கு முட்டுக் கட்டை போட்டார். 'இந்த திட்டத்தால் மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு எந்த பயனும் இல்லை; குஜராத்துக்கு தான் பயன்' என்றார். மஹாராஷ்டிரா அரசின் ஒப்புதல் இல்லாததால், புல்லட் ரயில் சேவை திட்டம் முடங்கியது; இது, பா.ஜ.,வினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், மும்பையிலிருந்து, மஹாராஷ்டிராவின் மற்றொரு நகரமான நாக்பூருக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும்படி உத்தவ் தாக்கரே, சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். 'இது என் கனவு திட்டம்' என்றும் அவர் அறிவித்தார். இதற்காகவே காத்திருந்த பா.ஜ.,வினர், 'உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா. இந்த திட்டம் எப்படி நிறைவேறும் என பார்ப்போம்' என, கருவிக் கொண்டிருக்கின்றனர்.

அக்கம் பக்கம்


சரிக்கட்ட முடியுமா?


'நமக்கு தலைவலியை ஏற்படுத்துவதற்காகவே புதிது புதிதாக கிளம்பி வருகின்றனர். முதல்வர் பதவியில் ஒரு நிமிடமாவது நிம்மதியாக அமர முடிகிறதா...' என கதறுகிறார், கோவா முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான பிரமோத் சாவந்த். இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க முதல்வர் பிரமோத் சாவந்த், தீவிர முயற்சிகளில்
இறங்கியுள்ளார். காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த நேரம் பார்த்து, புடி கவோங்கர் என்ற சமூக ஆர்வலர், 'வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் பிரமோத் சாவந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்' என, அறிவித்துள்ளார். இது தான், பிரமோத் சாவந்திற்கு கவலையை
ஏற்படுத்தி உள்ளது. கவோங்கரை சாதாரண ஆள் என ஒதுக்கி தள்ளி விட முடியாது. வி.எச்.பி., அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர். கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.
இவர் கோவாவில் இரண்டு லட்சத்துக்கு அதிகமான மக்களை திரட்டி, சுற்றுச் சூழல் தொடர்பாக போராட்டம் நடத்தி வருகிறார். கோவாவில் வசிக்கும் பழங்குடியின சமூக மக்களிடமும், இவருக்கு செல்வாக்கு உள்ளது.இதனால், இவர் தேர்தலில் நின்றால் தோற்று விடுவோமோ என்ற பயம், பிரமோத் சாவந்திற்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 'கவோங்கரை எப்படி
சரிக்கட்டுவது' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X