சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : அக் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: கோவில் நிலங்கள், கட்டடங்களின் வாடகையை முறையாக வசூல் செய்ய, 'ஆன்-லைன்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியாய வாடகை நிர்ணய குழு விரைவில் அமைக்கப்படும். தொழில்நுட்ப வசதி இல்லாத வாடகைதாரர்கள், கோவில் அலுவலகத்தில் வாடகை செலுத்தி அதற்கான ரசீதை பெறலாம்.'டவுட்' தனபாலு: கோவில்களுக்கு வழங்கப்பட்ட கட்டடங்கள், வயல்களை
 'டவுட்' தனபாலு

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு: கோவில் நிலங்கள், கட்டடங்களின் வாடகையை முறையாக வசூல் செய்ய, 'ஆன்-லைன்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியாய வாடகை நிர்ணய குழு விரைவில் அமைக்கப்படும். தொழில்நுட்ப வசதி இல்லாத வாடகைதாரர்கள், கோவில் அலுவலகத்தில் வாடகை செலுத்தி அதற்கான ரசீதை பெறலாம்.'
டவுட்' தனபாலு: கோவில்களுக்கு வழங்கப்பட்ட கட்டடங்கள், வயல்களை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்து சமய அறநிலையத் துறை தான், பிறருக்கு வாடகைக்கு கொடுத்தது. அந்த கோவிலின் பூசாரிகளோ, நிர்வாகிகளோ, சுவாமியோ, பக்தர்களோ கொடுக்கவில்லை. அதில் ஏற்பட்ட துணிச்சல் தான் இப்போது கோவில் நகைளை உருக்கும் அளவுக்கு வந்துள்ளதோ என்ற, 'டவுட்' பக்தர்களுக்கு வந்துள்ளது

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்: உ.பி., லக்கிம்பூரில் நடந்த சம்பவத்துக்கு பின், காங்., தலைமையில் எதிர்க்கட்சிகள் விரைவாக மீண்டெழ வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், காங்., அமைப்பு ரீதியாகவும், ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க, தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
'டவுட்' தனபாலு: தேர்தல் வெற்றிக்கு கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுக்கும் உங்களுக்கே, 'காங்கிரஸ் தேறாது' என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டதோ என்ற, 'டவுட்' எழுகிறது. ஒரு பிரஷாந்த் கிஷோர் இல்லை, 100 பிரஷாந்த் கிஷோர் வந்தாலும், காங்., நிலை கஷ்டம் தான் என்பதில், நம் நாட்டு மக்களுக்கு நீண்ட காலமாக மாற்றுக் கருத்து இல்லை

lதமிழக மகளிர் காங்., தலைவர் சுதா ராமகிருஷ்ணன்: நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொது நாகரிகம் இல்லாமல், பொது மேடையில், காங்., முன்னாள் தலைவர் சோனியாவை பற்றி அவதுாறாக பேசி வருகிறார். இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: இலங்கை, விடுதலை புலிகள் தவிர்த்து, சீமானின் பேச்சு ஆவேசமாக இருக்குமே தவிர, சமீப காலமாக அவர் நியாயமாகத் தான் பேசி வருகிறார். காங்கிரசுக்கு தலைவராக சோனியா மற்றும் ராகுல் ஆன பிறகு தான் அக்கட்சிக்கு வீழ்ச்சி துவங்கியது என்பதில் காங்கிரசார் உட்பட யாருக்கும், 'டவுட்' இல்லை. அது உண்மை தான் என்பது போலவே, இப்போது கூட ராகுலின் செயல்பாடுகள் உள்ளன


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: அனல் மின் நிலையங்களில், நிலக்கரியின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கக் கூடியது. இந்நிலைமை நீடித்தால், தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதை தவிர்க்க, மாநில அரசு முயல வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளாக, தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத அளவுக்கு பக்குவமாக, அ.தி.மு.க., அரசு பார்த்துக் கொண்டது. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மழை பெய்யாது; தண்ணீர் பஞ்சம் ஏற்படும்; மின் வெட்டு மீண்டும் வந்து விடும்' என, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் செய்தனர். அந்த நிலை நோக்கி பயணிக்கிறோமோ என்ற, 'டவுட்' சமீப காலமாக ஏற்பட்டுள்ளது!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் கள்ள ஓட்டை எதிர்த்துப் போராடி தன் ஓட்டை, பார்வதி என்ற பெண் பதிவு செய்துள்ளார். அவரது துணிச்சல் மெச்சத்தக்கது. இவர்களை போன்றவர்களால் தான் ஜனநாயக மாண்புகள் உயிர்த்திருக்கின்றன. இன்னும் கள்ள ஓட்டு கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்.

'டவுட்' தனபாலு: தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது தவறு தான், அதை விட பணத்துக்காக தன் கட்சி கொள்கைகளை மறந்து, பணம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் பல இருக்கின்றனவே. அது, அதை விட மோசம். அதனால் தான் நீங்கள் எந்த கட்சியுடனும் கூட்டு வைப்பதில்லையோ அல்லது உங்களுடன் யாரும் கூட்டணிக்கு வருவதில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!


பத்திரிகை செய்தி: '
காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கடிதம் எழுதி 15 நாட்கள் ஆகியும் பதில் இல்லை. எனவே, அடுத்த கட்டமாக, இரண்டு மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவும், குழுவை அனுப்பவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

'டவுட்' தனபாலு: தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் அண்டை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளாது என்பதில், 'டவுட்'டே இல்லை. ஏனெனில், தென் மாநிலங்களில் மொழி மற்றும் நீரை வைத்து தான் பெரும்பாலும் அரசியல் செய்யப்படுகிறது. ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சி 'ஓகே' சொன்னால், எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, அந்த கட்சியின் ஆட்சியை காலி செய்து விடும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-அக்-202118:40:42 IST Report Abuse
D.Ambujavalli நிலக்கரி ஸ்டாக்கில் ஊழல் செய்தது உங்கள் ஆட்சியில்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்த பிறகும் இருட்டடிப்பு பற்றி முதலைக் கண்ணீர் வடிக்க உங்களால்தான் முடியும்
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
10-அக்-202111:25:34 IST Report Abuse
கல்யாணராமன் சு. சும்மா சும்மா கடிதம் மட்டும் எழுதிகிட்டே இருந்த எந்த பிரயோஜனமும் இல்லை என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் தெரியும். போனை எடுத்து பேசலாமே, அதிலே என்ன பிரச்சினை இருக்கமுடியும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X