'குற்றவாளிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்கப்படுகிறார்கள்' அகிலேஷ் யாதவ்

Updated : அக் 09, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுதில்லி: லக்கிம்பூர் கேரி விவகாரம் குறித்து தற்போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு மோடி அரசு மலர் கொத்து கொடுத்து வரவேற்பதாக அவர் விமர்சித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் முன்னதாக யூனியன் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் சொகுசு கார் ஏற்றி நான்கு விவசாயிகளை கொன்ற

புதுதில்லி: லக்கிம்பூர் கேரி விவகாரம் குறித்து தற்போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு மோடி அரசு மலர் கொத்து கொடுத்து வரவேற்பதாக அவர் விமர்சித்துள்ளார்.



latest tamil news



உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் முன்னதாக யூனியன் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் சொகுசு கார் ஏற்றி நான்கு விவசாயிகளை கொன்ற வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல மாநில தலைவர்கள் இச்சம்பவம் குறித்து விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்து விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். மத்திய அரசு குற்றவாளிகளுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்பதாக அவர் விமர்சித்துள்ளார். யூனியன் அமைச்சர் அஜய் மிஸ்ரா இன்னும் பதவி நீக்கம் செய்யப்படாததை அடுத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.


latest tamil news



ஏற்கனவே ராகுல், பிரியங்கா துவங்கி பல கட்சி தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தி விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மோடி அரசுக்கு கடும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
10-அக்-202113:39:09 IST Report Abuse
rajan குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க காத்துக் கொண்டுள்ளது தீயசக்தி கூட்டம்.
Rate this:
Cancel
10-அக்-202112:25:20 IST Report Abuse
பேசும் தமிழன் மத்திய அமைச்சர் கார் வரும்போது உங்களை யார் குறுக்கே போய் ரோட்டில் மறிக்க சொன்னது.... இங்கே எங்கள் பஞ்சாயத்து முதல்வர் வரும்போது இப்படி கும்பலாக போய் ரோட்டை மறித்தால் காவல் துறையினர் பிடித்து கொண்டு போய் நன்றாக கவனித்து அனுப்புவார்கள்.... என்ன கவனிப்பு என்று மட்டும் கேட்க கூடாது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-அக்-202111:09:05 IST Report Abuse
duruvasar சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாட்டின் முதல் அக்காவுக்கு அளித்த தாரை தப்பட்டை, மயிலாட்டம் , ஒயிலாட்டம் இதுவரை இந்தியாவில் ஏன் துபாயில் கூட யாரும் இதுவரை பார்த்ததில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X