சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதி பதவியேற்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதி பதவியேற்பு

Added : அக் 09, 2021
Share
சென்னை:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், பொறுப்பேற்றார்.குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதியின் பதவியேற்பு விழா, உயர் நீதிமன்றத்தில் நடந்தது.சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சிவஞானம் பதவிப் பிரமாணம் செய்து

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், பொறுப்பேற்றார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய நீதிபதியின் பதவியேற்பு விழா, உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சிவஞானம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதியை அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் வரவேற்றுப் பேசினார்.கடந்த, 2011ம் ஆண்டில் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் நியமிக்கப் பட்டார். 2013ல் நிரந்தரம் செய்யப்பட்டார்.

பதவியேற்ற பின், நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் பேசியதாவது:பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றது பெருமைக்குரியது. பழமையான கலாசாரம் உடைய தமிழகத்துக்கு வந்துள்ளேன். இன்று தமிழகத்தின் குடிமகனாக ஆகியுள்ளேன்.நானும், என் பேரனும், தமிழாசிரியர் வாயிலாக தமிழ் கற்போம்.

10 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்தாலும், மனதளவில் வழக்கறிஞராக தான் உள்ளேன். வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதற்காக, அந்த வழக்கை தள்ளுபடி செய்தது இல்லை. இவ்வாறு நீதிபதி பேசினார்.புதிய நீதிபதி பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை, 56 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X