பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால் 'டிவி' பரிசு அறிவிப்பு

Added : அக் 09, 2021
Share
Advertisement
திருப்பத்துார்:''தடுப்பூசி போட்டுக் கொண்டால், குலுக்கல் முறையில் மூன்று பேருக்கு 32 அங்குல 'கலர் டிவி' பரிசாக வழங்கப்படும்,'' என, திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா கூறினார்.திருப்பத்துாரில் அவர் கூறியதாவது: திருப்பத்துார் மாவட்ட மக்கள் தொகை 9.45 லட்சம். இதில், ஐந்து லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுக்

திருப்பத்துார்:''தடுப்பூசி போட்டுக் கொண்டால், குலுக்கல் முறையில் மூன்று பேருக்கு 32 அங்குல 'கலர் டிவி' பரிசாக வழங்கப்படும்,'' என, திருப்பத்துார் கலெக்டர் அமர் குஷ்வாஹா கூறினார்.

திருப்பத்துாரில் அவர் கூறியதாவது: திருப்பத்துார் மாவட்ட மக்கள் தொகை 9.45 லட்சம். இதில், ஐந்து லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.நிறைய பேருக்கு பயம் உள்ளதால் போட தயங்குகின்றனர். எனவே, 200 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விடுபட்டவர்களுக்கு அங்கேயே போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம், மாவட்டத்தில் 1,500 இடங்களில் நடக்கிறது. அதில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் குலுக்கல் முறையில், மூன்று பேரை தேர்வு செய்து, தலா 32 அங்குல கலர் டிவி பரிசாக வழங்கப்படும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 31 ஆயிரம் பேர், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X