இந்தியா

ஆரோவில் தலைவராக தமிழக கவர்னர் ரவி

Added : அக் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி:ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக, தமிழக கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.,யில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட எல்லையில், ஆரோவில் சர்வதேச நகர் அமைந்துள்ளது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், 1968 பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,800 பேர் இங்கு வசிக்கின்றனர்.ஆரோவில் சர்வதேச

புதுச்சேரி:ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக, தமிழக கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.,யில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட எல்லையில், ஆரோவில் சர்வதேச நகர் அமைந்துள்ளது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், 1968 பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,800 பேர் இங்கு வசிக்கின்றனர்.ஆரோவில் சர்வதேச நகரின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும், ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பவுண்டேஷன் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி., கரண் சிங் பதவிக்காலம் கடந்தாண்டு நவ., 23ம் தேதியுடன் முடிந்தது.புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை, மத்திய கல்வி அமைச்சகம் துவக்கியது. தற்போது, ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக, தமிழக கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.உறுப்பினர்களாக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை உட்பட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சக உயர் கல்வி பிரிவு இணை செயலர் நீடா பிரசாத் வெளியிட்டுள்ளார். புதிய குழு விரைவில் கூடி, ஆரோவில் சர்வதேச நகரின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X