பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 09, 2021
Share
Advertisement
அக்., 10, 1906சென்னை புரசைவாக்கத்தில் 1906 அக்., 10ம் தேதி பிறந்தவர், ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி எனும் ஆர்.கே.நாராயணன். கார்ட்டூனிஸ்ட் லட்சுமணன், இவரது இளைய சகோதரர்.ஆசிரியராக பணிபுரிந்த ஆர்.கே.நாராயணனுக்கு எழுத்து துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. தன் அமெரிக்க அனுபவங்களை, 'மை டேட்லெஸ் டைரி' என செய்துள்ளார். இவரின் படைப்புகள், 'மால்குடி' எனும் கற்பனைக் கிராமத்தைத்
 இதே நாளில் அன்று


அக்., 10, 1906

சென்னை புரசைவாக்கத்தில் 1906 அக்., 10ம் தேதி பிறந்தவர், ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி எனும் ஆர்.கே.நாராயணன். கார்ட்டூனிஸ்ட் லட்சுமணன், இவரது இளைய சகோதரர்.ஆசிரியராக பணிபுரிந்த ஆர்.கே.நாராயணனுக்கு எழுத்து துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. தன் அமெரிக்க அனுபவங்களை, 'மை டேட்லெஸ் டைரி' என செய்துள்ளார். இவரின் படைப்புகள், 'மால்குடி' எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவியே இருக்கும்.இவர் எழுதிய, 'மால்குடி டேஸ்' கதைகள் பெரும் வரவேற்பை பெற்றது. இது, 'டிவி' தொடராக எடுக்கப்பட்டது. இவரின், 'தி கைட்' நாவல், ஹிந்தியில் படமாக எடுக்கப்பட்டது. நம் நாட்டின் சிறந்த ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.ராஜ்யசபா எம்.பி.,யாகவும் செயல்பட்டார். 'பத்ம விபூஷண், சாகித்ய அகாடமி' உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 'நோபல்' பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டார். 2001 மே 13ம் தேதி தன் 94வது வயதில் காலமானார்.எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X