பிரியங்காவை முன்னிலைப்படுத்த காங்., திட்டம் : அரசியல் செய்ய ராகுல் திணறுவதால் அதிரடி

Updated : அக் 10, 2021 | Added : அக் 09, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில், தங்கள் வாரிசுகளை அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாக முன்னிலைப்படுத்துவது அரசியல் கட்சி தலைவர்களின் வழக்கம். வாரிசு அரசியலில் பெயர் போன நேரு குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசை முன்னிலைப் படுத்தும் பணியை காங்., தலைமை துவங்கி உள்ளது. பா.ஜ.,வை மட்டுமல்லாமல், மாநில கட்சிகளை கூட எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் ராகுல் திணறுவதால், அவரது
பிரியங்கா,  அடுத்த வாரிசு!  அரசியல், ராகுல் திணறல்

தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில், தங்கள் வாரிசுகளை அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாக முன்னிலைப்படுத்துவது அரசியல் கட்சி தலைவர்களின் வழக்கம். வாரிசு அரசியலில் பெயர் போன நேரு குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசை முன்னிலைப் படுத்தும் பணியை காங்., தலைமை துவங்கி உள்ளது.

பா.ஜ.,வை மட்டுமல்லாமல், மாநில கட்சிகளை கூட எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் ராகுல் திணறுவதால், அவரது இடத்துக்கு பிரியங்காவை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் காங்., முனைப்பு காட்ட துவங்கி உள்ளது. உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்கவுள்ளது. இதற்கான வியூகங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே ஈடுபடத் துவங்கிவிட்டன.இந்த நேரத்தில் உ.பி.,யின் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் அனலை அதிகப்படுத்தி உள்ளது.
குற்றச்சாட்டுவன்முறையில் உயிர்இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க காங்., பொது செயலர் பிரியங்கா சமீபத்தில் லக்கிம்பூர் செல்ல முயன்றார். அவரை போலீசார் சிறை வைத்தனர்.
இது உ.பி., அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், ராகுலுடன் பிரியங்காவும் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.'இது மிக தெளிவாக திட்டமிடப்பட்ட அரசியல் நாடகம்' என, அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் சில முன்கதைகளையும் முன்வைக்கின்றனர்.

உ.பி.,யின் சோன்பத்ராவில் சில ரியல் எஸ்டேட் அதிபர்களால் பழங்குடி இனத்தை சேர்ந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதும் இதே போன்ற நாடகத்தை பிரியங்கா அரங்கேற்றியதை அரசியல் விமர்சகர்கள் நினைவு படுத்துகின்றனர். உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது தலித் பெண், கடந்த ஆண்டு கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரிழந்தார்.

அப்போது ராகுலும், பிரியங்காவும் அந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது. சோனியா வாரிசுகளின் இதுபோன்ற போராட்டங்கள், நேரடி சந்திப்புகள், இந்திரா பின்பற்றிய உத்தி என கூறப்படுகிறது.கடந்த 1975ல் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய பின், 1977ல் நடந்த லோக்சபா தேர்தலில் இந்திரா படுதோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் வெளியில் தலைகாட்டாமல் சிறிது காலம் அரசியல் துறவறத்தில் இருந்தார்.
அந்த நேரத்தில் பீஹாரின் பெல்ச்சி என்ற இடத்தில் எட்டு தலித்கள் உட்பட 11 பேர், உயர் ஜாதி நிலச்சுவன்தார்களால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்திரா, நீண்ட இடைவெளிக்கு பின் மக்கள் முன் தோன்றினார். பெலிச்சிக்கு நேரடியாக சென்றார். மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்திராவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
இந்திரா அதிகாரத்தில் இல்லாததால் தான், தலித்கள் கொல்லப்படுகின்றனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.

இதே உத்தியை தான் பிரியங்கா தற்போது அரங்கேற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பிரியங்காவுடன் இந்திராவை ஒப்பிடலாமா என்ற கேள்வி எழாமல் இல்லை.இதற்கு மூத்த அரசியல் விமர்சகர் அளித்த விளக்கத்தில் கூறியதாவது:பிரியங்கா லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டது இல்லை. அவர் உ.பி., மாநிலத்திற்கு உள்ளேயே தன்னை சுருக்கிக்
கொண்டுள்ளார். ஆனால் இந்திரா தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச தலைவராக விளங்கினார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ல் நடந்த போரில் நாம் வெற்றி பெற்றபோது இந்திரா பிரதமராக இருந்தார். 1975 அவசரநிலை அறிவிக்கப்பட்டது மட்டுமே அவரது அரசியல் வாழ்வில் சறுக்கலாக அமைந்தது. 1977க்கு பின் நம் நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக இந்திரா உருவெடுத்தார்.ஆனால் பிரியங்கா விஷயத்தில் நடந்ததே வேறு. கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, உ.பி., பொறுப்பாளராக
பிரியங்கா களம் இறக்கப்பட்டார். பொதுவாக மூத்த காங்., தலைவர்களுக்கு அளிக்கப்படும் இந்த பொறுப்பு பிரியங்காவிடம் வந்து சேர்ந்தது.

அவரது துரதிருஷ்டம், அந்த தேர்தலில் ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்., வென்றது. காங்., கோட்டை என வர்ணிக்கப்படும் அமேதி யில் கூட தோல்வியை தழுவியது. பிரியங்காவின் ஆரம்ப அரசியலே தோல்வியில் முடிந்தது. ஆனாலும் காங்., பொதுச் செயலர் பதவி பிரியங்காவுக்கு வழங்கப்பட்டது.
காங்., மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என பிரியங்கா உண்மையிலேயே விரும்பினால், அவரது தாயார் சோனியாவிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்.
காங்., தலைவராக 1999ல் பொறுப்பேற்ற சோனியா, 2004 - 2014 வரை மத்தியில் காங்., ஆட்சியை துார நின்று இயக்கினார்.

வலியுறுத்தல்

உ.பி.,யில் கடந்த 2017 சட்டசபை தேர்தலின் போது, பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி அரசியல் வியூக நிபணர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தினார். ஆனால் அது நிறைவேறவில்லை.
உ.பி.,யில் ஆட்சி அதிகாரத்தை காங்., இழந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த இரண்டு லோக்சபா தேர்தலிலும் படு தோல்வியை சந்தித்தது.அரசியலில் தன் பாட்டியை போல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரியங்கா விரும்பினால், அவர் நிரந்தரமாக லக்னோவில் குடியேற வேண்டும்; அதைவிடுத்து, கவன ஈர்ப்புக்காகவும், ஊடக வெளிச்சத்துக்காகவும் ஆண்டுக்கு ஒருமுறை போராட்ட நாடகங்களை மேடை ஏற்றுவது பலன் அளிக்காது.
இவ்வாறு அவர்கூறினார்.

வருண் நீக்கம் பாதிப்பை ஏற்படுத்துமா?

உ.பி., - பா.ஜ., - எம்.பி.,க்களான மேனகா மற்றும் அவரது மகன் வருண் ஆகியோர், பா.ஜ., செயற்குழுவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர். மேனகா மத்திய அமைச்சராகவும் இருந்தவர். மேனகா, முன்னாள் பிரதமர் இந்திராவின் இளைய மருமகள்.
சோனியா குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மேனகாவும், வருணும் பா.ஜ.,வில் இணைந்து செயல்படுகின்றனர். இந்நிலையில் பா.ஜ., செயற்குழுவில் இருந்து இவர்கள் திடீரென நீக்கப்பட்டதற்கு லக்கிம்பூர் வன்முறை காரணமாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கடுமையாக விமர்சித்ததோடு, 'குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்' என, வருண் தொடர், 'டுவிட்'களை பதிவிட்டார்.
இதனால் எரிச்சல் அடைந்த பா.ஜ., தலைமை, அவரது செயற்குழு உறுப்பினர் பதவியை பறித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2019ல், தே.ஜ., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, வயதை காரணம் காட்டி மேனகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காத மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டது. அதிலும் மேனகா நிராகரிக்கப்பட்டார். உ.பி.,யின் பிலிப்பிட் மற்றும் சுல்தான்பூர் லோக்சபா தொகுதிகளில் மேனகா மற்றும் வருணுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது.இங்கு 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் இங்கு பா.ஜ.,வுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல், மேனகா - வருண் ஆகியோர் பா.ஜ.,வில் இருந்து விலகி செல்லவும் வாய்ப்புஉள்ளதாக கூறப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
10-அக்-202122:29:49 IST Report Abuse
sankaseshan காங்கிரசுக்கு புத்த்துயிர் கிடைக்காது குற்றுயிர் ஆயிடும் . UP யில் இனிமேல் இவங்க பருப்பு வேகாது . மாயாவுதியும் அகிலே ஷும் இவருக்கு பாதக மாய் இருப்பார்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பது பகற்கனவு
Rate this:
Cancel
10-அக்-202119:36:18 IST Report Abuse
பேசும் தமிழன் சின்ன பிள்ளைக்கு கூட தெரியும்.... பப்பு அதுக்கு சரி பட்டு வர மாட்டார்..... ஆக மொத்தம் இத்தாலி குடும்பம் முழுவதும் லாயக்கு இல்லை
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10-அக்-202119:34:33 IST Report Abuse
NicoleThomson உங்க குடும்பத்தை விட்டு வேறு யாரும் தலைவர்களே இல்லையா? குலாம் நபி ஆசாத் போன்றவர்களுக்கு வழிவிடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X